சுரேஷ் சலேநிர்வாணமாக்கப்பட்டு, அத்துமீறிய உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை ஒப்புக் கொண்டது சி.ஐ.டி-மனைவி மனோரி

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, சிறைச்சாலையில் நிர்வாணமாக்கப்பட்டு அத்துமீறிய உடல் சோதனைக்கு (Deep Invasive Search) உட்படுத்தப்பட்டதை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முதன்முறையாக உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளதாக அவரது மனைவி மனோரி சலே குற்றஞ்சாட்டியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெற்ற விசாரணை ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மனோரி சலே, தனது கணவரை சிறை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, பிறர் முன்னிலையில் அவரது ஆடைகளைக் களைந்து, விலங்கிடப்பட்ட நிலையில் மலக்குடல் பரிசோதனை உள்ளிட்ட அத்துமீறிய ஆழமான உடல் சோதனைக்கு உட்படுத்தியதை சி.ஐ.டி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 8ஆம் திகதி இச்சம்பவம் நடந்ததிலிருந்து சி.ஐ.டி இந்த உத்தியோகபூர்வக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்தது. எனினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அண்மைய அமர்வில் கலந்துகொண்ட சி.ஐ.டி அதிகாரிகள், இந்த நடைமுறையை உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த தேடுதலுடன் தொடர்புடைய கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள், சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் இதற்கான உத்தியோகபூர்வ சுற்றுநிருபங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்குமாறு சி.ஐ.டிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

“சுரேஷ் சலே ஆரம்பத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சட்டவைத்திய அதிகாரி (JMO) மூலம் பரிசோதிக்கப்பட்ட போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். அவர் ஒரு விசேட ‘தண்டனை அறைக்கு’ மாற்றப்பட்ட பின்னரே, இத்தகைய கடுமையான சோதனைகளும் சித்திரவதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன” என மனோரி சல்லே தெரிவித்தார்.

அவரது தற்போதைய தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்து விவரித்த அவர், தனது கணவர் எவ்வித காற்றோட்டமும் இல்லாத 6×4 அடி அளவுடைய மிகச் சிறிய அறையொன்றில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஒரு வகையான உளவியல் சித்திரவதையாக 24 மணி நேரமும் அந்த அறையில் மின்விளக்கு எரியவிடப்பட்டுள்ளதுடன், முதல் 40 நாட்களுக்கு அவர் வெற்று சிமெந்து தரையிலேயே தூங்கக் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

அவ் வளாகம் எலிகள் தொல்லை மிகுந்ததாகக் காணப்படும் அதேவேளை, அதே தளத்தில் இருந்த வேறு சில கைதிகள் எலி கடித்ததால் அவசர மருத்துவ ஊசிகளைப் பெற வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், மலசலகூடத்திற்கு மிக அருகில் இந்தச் சிறை அறை அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் கடுமையான துர்நாற்றம் காரணமாகத் தனது கணவரின் நாள்பட்ட ஒற்றைத்தலைவலி (Migraine) நோய் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

தற்போதைய நிலையில் சுரேஷ் சலே உணவு மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ள மறுத்து வருவதால், ஊசி மூலம் உட்செலுத்தப்படும் (Intravenous) குறைந்தபட்ச திரவங்கள் மூலமே மருத்துவப் பணியாளர்கள் அவரது உயிரைத் தக்கவைத்துள்ளனர். அவர் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாகவும், பேசுவதற்குக் கடுமையான சிரமத்தை எதிர்கொள்வதுடன், நீண்ட நேரம் நிமிர்ந்து உட்கார முடியாமலும், கைகளில் நீண்ட நாட்களாக ஊசிக்குழாய் (Cannula) பொருத்தப்பட்டிருப்பதால் கைகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி விவரித்தார்.

இவ் மனித உரிமை மீறல்கள் குறித்து விவரித்து, இதில் தலையிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு தான் இரண்டு முறை கடிதம் எழுதியுள்ள போதிலும், இதுவரை அரசாங்கத் தரப்பிலிருந்து தமக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ பதிலும் அல்லது கடிதம் கிடைத்ததற்கான அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்றும் மனோரி சல்லே மேலும் தெரிவித்தார்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்