‘சிறி’ மென்பொருளால் ஆப்பிள் நிறுவனத்திற்கு நஷ்டம்

சிறி (Siri) குரல் உதவி மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) இற்றைப்படுத்தல்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பங்குதாரர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்க ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு பீட்டர் லேண்ட்ஷெஃப்ட் என்பவரால் கலிபோர்னியாவின் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மென்பொருள் உருவாக்குநர்கள் மாநாட்டில் (WWDC) ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களை, அதே நாளில் வெளியிடப்பட்ட புதிய “iPhone” கைபேசிகளுடன் வழங்கத் தவறியமையே இந்த வழக்கிற்கு அடிப்படையாக அமைந்தது.

நிறுவனம் அந்த அம்சங்கள் குறித்து பெருமளவில் விளம்பரங்களை மேற்கொண்ட போதிலும், கைபேசிகள் சந்தைக்கு வெளியிடப்பட்ட போது அந்த அம்சங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தத் தாமதத்தினால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்களுக்கு பங்குதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பின்னர் 2025 ஆம் ஆண்டில், சிறியின் செயற்கை நுண்ணறிவு நவீனமயமாக்கல் இந்த ஆண்டு வரை நடைபெறாது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள வருடாந்த மென்பொருள் உருவாக்குநர்கள் மாநாட்டில் இந்த புதிய அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும் என்பதை நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த இணக்கப்பாட்டின் போது ஆப்பிள் நிறுவனம் தனது தரப்பில் தவறு நடந்ததாக ஒப்புக்கொள்ளவில்லை என்பதுடன், இந்த உடன்படிக்கைக்கு இன்னும் நீதிபதியின் அங்கீகாரம் தேவைப்படுகிறது.

இது குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளது:

“கூடுதல் அம்சங்கள் இரண்டை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தீர்த்துக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் உடன்பாட்டிற்கு வந்துள்ளது. எமது பயனர்களுக்கு மிகவும் புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் எமது கவனத்தைத் தொடர்ந்தும் செலுத்துவதற்காகவே இப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டோம்.”

2024 ஆம் ஆண்டு ‘Apple Intelligence’ அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தாம் மேலும் பல செயற்கை நுண்ணறிவு அம்சங்களை வெளியிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,

rain cana

ஜி.டி.ஏ (GTA) பகுதியில் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம்

July 28, 2026

டொராண்டோ நகரில் இன்று இரவு கனமழையும் இடியுடன் கூடிய புயலும் வீசக்கூடும் என்பதால், ‘டொராண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை’

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக