சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கஜேந்திரகுமார் எம்பி நேரில் ஆய்வு

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று (28/05/2026) சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்குள்ள தேவைப்பாடுகள், குறைபாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டார்.
​மருத்துவமனையின் தற்போதைய நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் மருத்துவமனையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
​மருத்துவமனைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினரை நிர்வாகத்தினர் வரவேற்றதுடன், பல்வேறு பிரிவுகளுக்கும் அவரை அழைத்துச் சென்று தற்போதைய செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
​குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு (OPD), தங்கி சிகிச்சை பெறும் விடுதிகள், அவசர சிகிச்சை பிரிவு பிரசவ விடுதி, விபத்து அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
​ மருத்துவமனையில் பணியாற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் தாதியர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
​ஆய்வினைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன:
​கட்டமைப்பு மற்றும் பௌதீகக் குறைபாடுகள்: மருத்துவமனையின் தற்போதைய கட்டிடத் தொகுதித் தேவைகள், விடுதிகளின் கொள்ளளவு பற்றாக்குறை மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களின் அவசியம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ஆனால் அவை எல்லாவற்றையும் விட​ மருத்துவர்கள், தாதிகள் மற்றும் ஏனைய சிற்றூழியர்கள் போன்றோரின் ஆளணி பற்றாக்குறை காரணமாக ஏற்படும் பணிச்சுமை மற்றும் சேவைகளில் ஏற்படும் தாமதங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
​தென்மராட்சிப் பகுதி மக்களின் பிரதான மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த ஆதார மருத்துவமனையை, அடுத்த கட்டத்திற்கு தரம் உயர்த்துவதற்குத் தேவையான நீண்டகால அபிவிருத்தி வரைபடம் (Development Master Plan) குறித்து நலன்புரிச் சங்க உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதார மருத்துவமனைகள் வளப் பங்கீட்டின் போது சாவகச்சேரி ஆதார மருத்துவமனை பின்தங்கி உள்ளது என்பதை குறிப்பிட்டு இருந்தார்கள்.
​கலந்துரையாடலின் நிறைவில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்:
​சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் தற்போதைய மனிதவளக் குறைபாடுகள் மற்றும் ஏனைய அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் வியைவாக நிவர்த்தி செய்யப்பட வேண்டியவை என்பதை தங்களின் கோரிக்கைகள் மூலம் முழுமையாக புரிந்து கொள்கின்றேன். இங்குள்ள தேவைகள் மற்றும் குறைபாடுகள் அனைத்தையும் அறிக்கையாகத் தொகுத்து எனக்கு சமர்ப்பியுங்கள் அதன் அடிப்படையில், நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், உரிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக இதற்கான தீர்வையும் பெற்றுத்தர முழுமையான அழுத்தங்களைப் பிரயோகிப்பேன் என உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு