ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஆடிஷனுக்கு வர வைத்த போதிலும் சாரா அர்ஜுனை துரந்தர் படத்திற்காக தேர்வு செய்தார்கள். சாராவின் அப்படி என்ன ஸ்பெஷல் என்று காஸ்டிங் டைரக்டர் முகேஷ் சப்ரா கூறியிருக்கிறார்.
ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் மார்ச் 19ம் தேதி வெளியான துரந்தர் 2 படத்தின் வசூல் வேட்டை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். துரந்தர் 2 படம் திரைக்கு வந்த 17 நாட்களில் உலக அளவில் ரூ. 1, 560 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ. 1000 கோடி வசூலை தொடவிருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல. நேற்று வரை துரந்தர் 2 இந்தியாவில் ரூ. 985 கோடி வசூல் செய்தது.
துரந்தர் 2 ரிலீஸான அன்றே இந்தியாவில் ரூ. 100 கோடி வசூல் செய்தபோதே இது கண்டிப்பாக ரூ. 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று பாலிவுட் ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தார்கள். ரன்வீர் சிங் உளவாளியாக நடித்த துரந்தர் 2 படம் ரூ. 2 ஆயிரம் கோடி கிளப்பில் சேரும் நாள் தொலைவில் இல்லை. துரந்தர், துரந்தர் 2 மூலம் நாடே கவனிக்கும் ஹீரோயினாகிவிட்டார் சாரா அர்ஜுன். குழந்தை நட்சத்திரமாக பெயர் எடுத்த அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் தான் ஆதித்யா தார் இயக்கிய துரந்தர். இந்நிலையில் சாரா அர்ஜுனை ஹீரோயினாக தேர்வு செய்தது ஏன் என்று காஸ்டிங் டைரக்டர் முகேஷ் சப்ரா பாலிவுட் ஹங்கமாவிடம் கூறியிருக்கிறார்.
மேலும் புதுமுகமாக இருப்பது முக்கியம். ரன்வீர் சிங்குடன் ஏற்கனவே நடித்திருப்பவர்களை தேர்வு செய்தால் அது சரிபட்டு வராது. பாகிஸ்தானுக்கு சென்ற இடத்தில் ரன்வீர் சந்திக்கும் பெண் கதாபாத்திரம் அது. அதனால் புது முகம் தான் நம் தேவை என்று ஆதித்யா தாரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் முகேஷ் சப்ரா.
சாரா அர்ஜுன் இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் ஹீரோயினாக நடிக்கவில்லை. அது அவருக்கு பிளஸ் பாயிண்டாக மாறியது. நம் படத்திற்கு தேர்வு செய்யும் புதுமுக ஹீரோயினை பார்த்து யார் இந்த பெண் என அனைவரும் வியக்க வேண்டும் என்று நினைத்து 1, 200 முதல் 1, 300 பேரை ஆடிஷனுக்கு அழைத்திருக்கிறார்கள். அந்த ஆயிரத்தில் ஒருத்தியாக தேர்வு செய்யப்பட்டவர் தான் சாரா அர்ஜுன்.
முகேஷ் சப்ரா எதிர்பார்த்த மாதிரியே நடந்துவிட்டது. துரந்தர் படத்தில் யலினா ஜமாலி எனும் கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுனை பார்த்தவர்கள் அசந்து தான் போனார்கள். நம்ம பேபி சாரா ஹீரோயினா என்று வியந்தார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தான் பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது.