யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த, யாழ். இந்துக் கல்லூரியின் திறமையான மாணவர் ஒருவர் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.
லவன் அக்சயன் என்ற அந்த மாணவன், கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் (A/L) கணிதப் பிரிவில் தோற்றி 3A பெறுபேறுகளைப் பெற்றுச் சாதனை படைத்திருந்தார். அண்மையில் வெளியான பெறுபேறுகளின்படி, அவர் யாழ். மாவட்ட மட்டத்தில் 24-வது இடத்தைப் பிடித்துப் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றிருந்தார்.
பல்கலைக்கழகக் கனவுகளுடன் இருந்த இம்மாணவன், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் உயிரிழந்தமை அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இணுவில் கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.