சாதனை படைத்த திருகோணமலை மாணவி நிவாஷ்னி

இலங்கையின் 11 வயதுக்குட்பட்டோர் பெண்கள் விரைவு சதுரங்கத் தரவரிசையில் இரண்டாம் இடத்தையும், 1670 சர்வதேச மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் உலகளவில் 120ஆம் இடத்தையும் பெற்று திருகோணமலை மாணவி நிவாஷ்னி சாதனை புரிந்துள்ளார்.

இவர் சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் சர்வதேச விரைவு சதுரங்க மதிப்பீட்டின் அடிப்படையில், 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 1670 புள்ளிகளைப் பெற்று இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் செயற்பாட்டிலுள்ள இதே பிரிவில் மதிப்பீடு பெற்ற வீராங்கனைகளில் 120ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

நடப்பாண்டில் நடைபெற்ற 15ஆவது கண்டி சர்வதேச திறந்தநிலை சதுரங்கப் போட்டியில், 12 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கேற்ற நிவாஷ்னி, விரைவு நிலைப் போட்டியில் சம்பியன் பட்டத்தையும், பிளிட்ஸ் பிரிவில் 2ஆம் இடத்தையும், கிளாஸிக்கல் பிரிவில் 10ஆம் இடத்தையும் பெற்று மூன்று பிரிவுகளிலும் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்தார். ஒரே போட்டியில் மூன்று பிரிவுகளிலும் திறமையை வெளிப்படுத்தியமை அவரது சதுரங்க ஆற்றலையும் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டுகின்றது.

இவ்வாண்டு நடைபெற்ற ஸ்ரீலங்கா பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் தனிநபர் சம்பியன்ஸ் போட்டியின் 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் பங்கேற்ற நிவாஷ்னி, 7 சுற்றுகளில் 5 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டச் சிறப்பு வெற்றி நிலையையும் பெற்றார். இந்தப் போட்டியின் மூலம் தனது சர்வதேச சதுரங்க மதிப்பீட்டில் சுமார் 35 புள்ளிகள் மதிப்பீட்டு அதிகரிப்பையும் பெற்றுள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவியான ஜெகதீஷன் நிவாஷ்னி, சதுரங்க விளையாட்டில் தொடர்ச்சியாகப் பல சாதனைகளைப் படைத்து திருகோணமலை மாவட்டத்திற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்து வருகின்றார்.

திருகோணமலை சதுரங்கப் பயிற்சி நிலையத்தின் மூலம் இவர் தனது பயிற்சிகளைப் பெற்றுள்ளார். கோணேசலிங்கம் ஜெகதீசன், ஷோபனா ஜெகதீசன் தம்பதிகளின் மகளான இவர், 2024ஆம் ஆண்டில் இலங்கை தேசிய மட்டத் தெரிவுப் போட்டியின் மூலம் பொதுநலவாய சதுரங்கச் சம்பியன்ஸ் போட்டிக்கான குழுவிற்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

903651083_1652694032964039_3320954434029869657_n

கனடா உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு

November 11, 2026

11.11. 2026 பிற்பகல் 3.00 மணி அளவில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு இசபெல்லா மார்டின் அம்மையாருடன் ஜனநாயக தமிழ்

bear1

கனடாவில் தாய் மற்றும் மகள் உயிரிழந்த கொடூரத் தாக்குதல்: நான்கு  கரடிகள் சுட்டுக் கொலை

November 11, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தாயும் மகளும் கரடித் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு கிரிஸ்லி (Grizzly) கரடிகள்

anojan

அனோஜன் விடுதலை: அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதிதீர்மானம்

November 11, 2026

முகநூல் (Facebook) பதிவு ஒன்றின் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும்

sathu

சாதனை படைத்த திருகோணமலை மாணவி நிவாஷ்னி

November 11, 2026

இலங்கையின் 11 வயதுக்குட்பட்டோர் பெண்கள் விரைவு சதுரங்கத் தரவரிசையில் இரண்டாம் இடத்தையும், 1670 சர்வதேச மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் உலகளவில் 120ஆம்

shi

ஷிரான் பாசிக் வழக்கு ஒத்திவைப்பு

November 11, 2026

கொக்கேய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான்

co

வர்த்தக பெயர்களை பதிவு செய்ய புதிய நடைமுறை

November 11, 2026

நாட்டின் வர்த்தக நாமங்களை பதிவுசெய்யும் நடைமுறையை எளிய, மற்றும் இலகுவானதாக மாற்றும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எளிய மற்றும் ஒருங்கிணைந்த வணிகப்

tr

கொழும்பில் பறக்கத் தயாரான ஆளில்லாப் பயணிகள் ட்ரோன்

November 11, 2026

இலங்கையில் புதிய வான்வழிப் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கையாக, மின்சாரத்தில் இயங்கும் ஆளில்லா பயணிகள் விமான சேவையின் முதலாவது

hiru

ஹிருணிகாவின் மேன்முறையீட்டை விசாரிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம்

November 11, 2026

சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டை விசாரிப்பதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரினால் மூவரடங்கிய

storm

பி.சி. புயல் காரணமாக நெடுஞ்சாலைகள் ‘குறுகிய கால அவகாச அறிவிப்பில் மூடல்’ செய்யப்படலாம்: மாகாண அரசு எச்சரிக்கை

November 11, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் (B.C.) தெற்கு கரையை ஒரு வலுவான புயல் தாக்கி வரும் நிலையில், நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, மிகக்

B7EZQF5DBNA47F3OT3JV5ZRSXU

ஒரு தொடர் பயங்கரக் கனவு’: பிரிந்து வாழ்ந்த மனைவியின் கொலையில் கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

November 11, 2026

பிரிந்து வாழ்ந்த தனது மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், கொலைக் குற்றச்சாட்டின் கீழ் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது,

court-judge-hammer-gavel-696x398

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி! பல இலட்சம் ரூபாவுடன் தலைமறைவான நபர் – சொத்துக்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவு

November 11, 2026

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின்

court-judge-hammer-gavel-696x398

மண்டைதீவு மனித புதைகுழி விவகாரம் – இராணுவத்தினரின் வாக்குமூலம் பெறுவதில் தாமதம் – விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை – 2027 ஜனவரி 5 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

November 11, 2026

1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு