சவாலான தீர்மானங்கள் குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்

நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையைச் சீர்செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசு எடுக்கும் கடினமான தீர்மானங்களின் பின்னணி குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

அமைச்சரவை மற்றும் அரச நிறுவனத் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வுகளைக் காண்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் ஒவ்வொருவரை ஒவ்வொரு விதமாகப் பாதிக்கும். அந்தப் பாதிப்புகள் அனைத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்தே நாம் முடிவுகளை எடுக்கின்றோம்.

இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் உலக நிலைமை எந்தப் பக்கம் திரும்பும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் நம்மைப் பாதிக்கும். அதற்கேற்ப நாம் தயாராக வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கி வரும் ஆலோசனைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் தினமும் இங்கு பல ஆலோசனைகளை வழங்குகின்றார்.

அந்த ஆலோசனைகளை அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனால், தற்போது எங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ அங்கிருந்தே நாம் தீர்வுகளைத் தேட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

தற்போதைய உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு முகம் கொடுப்பதற்குத் தேவையான பொறிமுறைகளை அரசு ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது உறுதிபடத் தெரிவித்தார்.

hurm

மாபெரும் குண்டு வீச்சுக்களால் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

March 18, 2026

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுங்கு குழிகளை ஊடுருவும்

har

நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

March 18, 2026

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய

pra

பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

March 18, 2026

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

rav

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

March 18, 2026

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி

chi

இணையத்தள மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

March 18, 2026

தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க

amb

அக்கரைப்பற்று பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு!

March 18, 2026

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால்

toru

சுற்றுலாத் துறை அமைச்சின் விசேட அறிவிப்பு

March 18, 2026

சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளுக்காகப் பதிவு செய்யும் முறைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு

us

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

March 18, 2026

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையமான ‘கிரீன் ஸோன்’ பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகம் மீண்டும்

Sigh

குடிவரவு மோசடி சந்தேக நபர் விடுவிக்கப்பட்டு கனடா மீது வழக்குத் தொடர அனுமதி

March 18, 2026

40 வயதான இந்தியரான குர்பிரீத் சிங், கனடா அரசாங்கம் மற்றும் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் (CBSA) ஊழியர்கள் மீது

Gro

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

March 18, 2026

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

chal

இலங்கையை நோக்கி வரும் நிலக்கரி கப்பல்கள்

March 18, 2026

எதிர்பார்க்கப்படும் வறட்சி அல்லது நிலக்கரி இறக்குமதி தாமதங்கள் காரணமாக, நாட்டின் மின்சார விநியோகத்துக்கு இதுவரை எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று

da

ஒன்டாரியோவில் Canada Goose இன் செயற்பாடுகள் – முதல்வர் டக் பேர்ட்

March 18, 2026

புகழ்பெற்ற கனடிய நிறுவனமான Canada Goose ஒன்டாரியோவில் தொடர்ந்து வளர்ந்து, இங்கிருந்தே நல்ல ஊதியமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி