சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 1.4 சதவீதமாகச் சரிந்துள்ளது.
மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதாரத் தரவு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு,மொத்த பணப்புழக்கப் பற்றாக்குறை ரூபா 288.31 பில்லியனுக்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பில்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்பில் ஏற்பட்ட ஒரு சிறிய சரிவைத் தவிர, அவற்றின் மதிப்பு பெருமளவில் நிலையாக இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (29.03.2026) பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,493.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.