தமிழகச் சட்டப்பேரவையில் சமூக நீதித்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, துறைசார் அமைச்சர் வன்னி அரசு 67 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் மேம்பாட்டிற்காக அரசு முன்னெடுத்துள்ள அந்த முக்கிய அறிவிப்புகளின் சுருக்கம் பின்வருமாறு:
1. வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள்
-
அகம் திட்டம்: வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்குச் சொந்தமாக 2,500 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
-
உறையுள் மற்றும் இனிய இல்லம்: பழங்குடியினருக்கு 2,000 வீடுகளும் (உறையுள்), ஆதிதிராவிடர்களுக்கு 5,000 வீடுகளும் (இனிய இல்லம்) வழங்கப்படும்.
-
விடிவெள்ளி திட்டம்: பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு லட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான சிறப்புத் திட்டம்.
-
ஏற்றம் திட்டம்: தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வங்கி உத்திரவாதத்துடன் 20% மானியம் வழங்கப்படும்.
2. கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு
-
உணவுக் கட்டணம் உயர்வு: விடுதி மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் பள்ளிகளுக்கு ரூ.1,400-ல் இருந்து ரூ.1,800 ஆகவும், கல்லூரிகளுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்படும்.
-
சமூக நீதி விடுதிகள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ரூ.160 கோடியில் 150 புதிய ‘சமூக நீதி விடுதிகள்’ கட்டப்படும்.
-
டிஜிட்டல் கற்றல் மையம்: சென்னை நந்தனத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக “டிஜிட்டல் கற்றல் மற்றும் புதுமை மையம்” உருவாக்கப்படும்.
-
அம்பேத்கர் படிப்பகம்: மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் மற்றும் சுயகற்றலை ஊக்குவிக்க அனைத்து விடுதிகளிலும் “அம்பேத்கர் படிப்பகம்” ஏற்படுத்தப்படும்.
3. பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பண்பாடு
-
சரிநிகர் திட்டம்: தனியார் நிறுவனங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதை ஊக்குவிக்கும் சம வேலைவாய்ப்புத் திட்டம்.
-
வளமிகு வேளாண்மை: ஆதிதிராவிட விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு வழங்க 90% மானியம் (1000 பேருக்கு) அளிக்கப்படும்.
-
முல்லை: பழங்குடியின மக்கள் சேகரிக்கும் சிறுவனப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் ‘முல்லை’ என்ற பிராண்ட் பெயரில் சந்தைப்படுத்தப்படும்.
-
பூம்பொழில் மற்றும் தடம்: பழங்குடியினப் பகுதிகளில் சூழலியல் சுற்றுலாவுக்கான “பூம்பொழில்” தங்கும் வசதிகளும், அவர்களின் கலாச்சாரத்தை அறிய “தடம்” என்ற மரபு நடையும் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த 67 அறிவிப்புகளில் எந்தத் திட்டம் அடித்தட்டு மக்களின் வாழ்வில் மிக விரைவான மற்றும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?