சமஸ்டி சுயாட்சியே வடகிழக்கு அரசியலுக்கு தீர்வு – ரெலோவின் தேசிய மாநாட்டில் பிரகடனம்

தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் பிரதான பலமாக விளங்குகின்ற புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டி எழுப்புவதற்கு அயராது பாடுபடுவோம் என்று ரெலோவின் தேசிய மாநாட்டில் பிரகடனம் வெளியிடப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12 வது தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது கட்சியின் மாநாட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.

குறித்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…..

ஈழத் தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு பிரதேசத்தை உள்ளடக்கிய எமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க கூடிய மீளப் பெறப்பட முடியாத பூரண அதிகாரம் உடைய சமஸ்டி முறையிலான சுயாட்சி அலகொன்றை அரசியல் தீர்வாக பெற்றுக் கொள்வதற்காக தொடர்ந்து அரசியல் ரீதியாக சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும்..

எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கான சர்வதேச நீதிப் பொறிமுறையை பெற்றுக் கொள்ளும் வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச சக்திகளோடு ஒன்றிணைந்து செயல்படவும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிப் பொறிமுறையை பெற்றுக் கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும்..

எமது தாயக மண்ணில் அரச இயந்திரங்களினால் தொடர்ந்தும் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் காணிகளை மீட்கவும் மேலதிகமான அபகரிப்புகளை தடுக்கவும் தொடர்ந்து உரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் வரையில் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள மாகாண சபை முறைமையை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தல்களை விரைந்து நடத்த தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும்..

எமது மக்களின் நலிந்து போன பொருளாதாரத்தை மீளக் கட்டியமைக்கும் முகமாக, பலதரப்பட்ட முதலீடுகளின் ஊடாக எமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய இனக்குடிப் பரம்பலை பேணக்கூடிய தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதற்கான அனைத்து வேலை திட்டங்களையும் அர்ப்பணிப்புடன் செயல்படுத்தவும்

எமது சமுதாயத்தின் உள்ள அனைத்து தரத்தினரதும் வாழ்க்கை தரத்தினையும் சமூக மேம்பாட்டையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவும்..

அனைத்து வேலை திட்டங்களையும் நடைமுறைச் சாத்தியமான வகையில் முன்னெடுப்பதற்கு பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவுடனான நமது உறவை தொடர்ந்து பேணிப் பாதுகாக்கவும மற்றைய சர்வதேச நேச சக்திகளை ஒருங்கிணைக்கவும் உரிய வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவும்.

தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் எமது பிரதான பலமாக விளங்குகின்ற புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டி எழுப்பும் அனைத்து வேலை திட்டங்களையும் அயராத முன்னெடுக்கவும் இப் பிரகடனம் விதந்துரைக்கிறது

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.