கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் கசிவு; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய பதிவை வெளியிட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படும் சான் கணேகொட எனும் சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல ஆகியோர் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பிலும் அதற்குப் பின்னால் உள்ள வெளிநாட்டுச் சக்திகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (30) முறைப்பாட்டை கையளித்த பின்னர் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை தொலைபேசியில் அழைத்து, அவரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ள சான் கணேகொட என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியே நாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்தோம். தம்மை சிவில் சமூக செயற்பாட்டாளர் என கூறிக்கொள்ளும் இவர், என்ன மாதிரியான சமூக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார் என்ற கேள்வி எழுகின்றது.

மக்களின் ஆணையினால் தெரிவு செய்யப்பட்ட டி.எஸ். சேனாநாயக்க, டி.பி. விஜேதுங்க, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரை, எதிர்காலத்தில் மக்களின் வாக்குறுதியால் பதவிக்கு வரவுள்ள எந்தவொரு ஜனாதிபதிக்கும் எதிராக இவ்வாறான செயல்களில் ஈடுபட எவருக்கும் இடமளிக்க முடியாது. வீதிகளில் செல்பவர்கள் ஜனாதிபதிகளைத் தொடர்பு கொண்டு குரல் பதிவுகளை எடுத்து வெறுப்பைப் பரப்புவதை அனுமதிக்க முடியாது.

இந்த விடயத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும். தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேச்சைக் குழுக்கள் மற்றும் சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து இவ்வாறான கீழ்த்தரமான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான குரல் பதிவுகளை வெளியிட்டு அச்சுறுத்தும் நபருக்குப் பின்னால் வெளிநாட்டுச் சக்திகள் அல்லது தொண்டு நிறுவனங்கள் செயற்படுகின்றனவா என்பது குறித்து சந்தேகம் காணப்படுகின்றது. நாட்டை அல்லது அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யும் சதித்திட்டம் காணப்படுகிறதா என்பது தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும். இவர் தற்போதைய ஜனாதிபதி அநுரவுடன் தொடர்பில் இருந்து, எதிர்காலத்தில் அவர் ஓய்வுபெற்ற பின்னரும் இவ்வாறான குரல் பதிவுகளை வெளியிடக்கூடும்.

இவருக்கு எதிராக பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் உள்ளதாக காவல்துறை முன்னாள் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எனவே இவரது தொலைபேசி உரையாடல் தரவுகள், வங்கிக் கணக்குகள், வருமான மூலங்கள் மற்றும் தொழில் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவரிடம் முறையான வருமான ஆதாரம் இல்லையெனில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் மூலம் தணிக்கை செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதிகளிடம் கேள்விகளை எழுப்ப மக்களுக்கு உரிமை உள்ளது. எனினும் அவர்கள் தவறு செய்திருந்தால் அதற்கு கௌரவமிக்க நீதிமன்றமே தண்டனை வழங்க வேண்டும். தனிநபர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்பட முடியாது. எனவே இச்சம்பவம் தொடர்பில் தொலைபேசி தரவுகள் மற்றும் சர்வதேச சதித்திட்டங்கள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் உடனடி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

ac

கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – மக்களின் கொந்தளிப்பால் வன்முறை

July 30, 2026

நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்கள்

z_p00-Namal-Rajapaksa

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம் – நாமல் ராஜபக்‌ஷ

July 30, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக அரசியலமைப்பின் 18 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டமை தவறு. கடந்த கால தவறுகள் ஊடாக

ff

37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

July 30, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி,

B3OFFCNFTZJGJNSYZ7YOVN3PCU

துப்பாக்கியுடன் கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபருக்குச் சிறைத்தண்டனை

July 30, 2026

தடைசெய்யப்பட்ட கைத்துப்பாக்கியுடன் கனடாவிற்குள் இரகசியமாக நுழைந்ததை ஒப்புக்கொண்ட நபருக்கு இரண்டு மற்றும் அரை ஆண்டுகள் (2.5 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக

EUUUVNQ56XLK2RW557P5JOJTXE

பெல்ஜியத்தில் கைதான கனடிய நேட்டோ (NATO) பெண் பயிற்சிப் பணியாளர்- சீனாவுக்காக உளவு பார்த்ததாகச் சந்தேகம்

July 30, 2026

பிரஸ்ஸல்ஸ் — உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கனடிய நேட்டோ பெண் பயிற்சிப் பணியாளர் சீனாவுக்காகப் பணியாற்றினார்

9_vck-thirumavalavan-demands-all-party-meeting-on-cauvery-issue-30-07-2026

காவிரி விவகாரம்: தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

July 30, 2026

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்

8

வடலூர் வள்ளலார் சர்வதேச மைய திட்டம் கைவிடப்பட்டது: சென்னை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்!

July 30, 2026

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் அமையவிருந்த பிரம்மாண்டமான வள்ளலார் சர்வதேச மையத் திட்டத்தைக் கைவிடுவதாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை

6

மேகதாது விவகாரத்தில் காங்கிரஸும் பிஜேபியும் கூட்டு சதி செய்கின்றனர் – அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

July 30, 2026

மாமல்லபுரம்: மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எதிராகக் கூட்டு சதி செய்வதாகப்

5

டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு: எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள திடுக்கிடும் தகவல்கள்!

July 30, 2026

சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் டெண்டர் மற்றும் மதுபான கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு

Pierre-OConnor

2006 ஆம் ஆண்டு கொலை வழக்கில் ரொறன்ரோ பொலிஸார் கைது நடவடிக்கை: மேலும் பல சந்தேக நபர்களைத் தேடும் பணி வீச்சு

July 30, 2026

கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பழமையான கொலை வழக்கு ஒன்றில் ரொறன்ரோ (Toronto) பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், இச்சம்பவத்துடன்

759803476_1058368157134427_418381261803682316_n

கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய முதலீடு.

July 30, 2026

யாழ்ப்பாணம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், மாகாணத்திற்காக

VTFAX2YXMVD7ZMPQN7QHXH2AFU

கல்கரி சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து அவசர எச்சரிக்கை அமைப்புகளில் சீர்திருத்தம் கோருகிறது ஒட்டிசம் நெட்வொர்க்

July 30, 2026

கல்கரியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் மரணத்தைத் தொடர்ந்து, காணாமல் போகும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளிலுள்ள மனிதர்களுக்கான அவசர எச்சரிக்கை அமைப்புகளில் (Emergency