மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு வரலாறு காணாத அளவில் தீவிரமடைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 72 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் 29 பேர்வில் எபோலா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 782 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 178 ஆகவும் உயர்ந்துள்ளது.
முந்தைய பாதிப்புகளை ஏற்படுத்திய ‘ஜைர்’ (Zaire) வைரஸ் போலல்லாமல், தற்போது பரவி வரும் ‘புண்டிபுகியோ’ என்ற அரிய வகை எபோலா வைரஸ் திரிபிற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான சிகிச்சைகளோ இல்லை என்பது உலக சுகாதார அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களில் மரண விகிதம் 22.8 சதவீதமாக உள்ளது. 29 பேர்வின் கிழக்குப் பகுதியான இத்தூரி மாகாணம் இந்த எபோலா பரவலின் மையப்பகுதியாக மாறியுள்ளதுடன், ஒட்டுமொத்த பாதிப்பில் 95 சதவீதம் இங்குதான் பதிவாகியுள்ளது.
இங்கிருந்து அண்டை மாகாணங்களான வட கிவு, தென் கிவு மற்றும் அண்டை நாடான உகாண்டாவிற்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
எபோலா பரவலின் உண்மையான வீரியத்தை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பு எச்சரித்துள்ளதுடன், தடுப்பு நடவடிக்கைகளுக்கு 21.5 மில்லியன் டொலர் நிதிப்பற்றாக்குறை நிலவுவதாகவும் கவலை தெரிவித்துள்ளது.