ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).
கடந்த 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் பிரம்படிப் பகுதியில் அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய இராணுவம் கண்மூடித்தனமான கோரத்தாண்டவத்தை நிகழ்த்தியது.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் சுட்டும், கவச வாகனங்களால் நசுக்கியும் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இன்றைய தினம் கொக்குவில் பிரம்படி சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில், படுகொலை செய்யப்பட்ட நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு #தமிழ்த்தேசியமக்கள்முன்னணியினரால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
எம் மண்ணில் அநியாயமாக உயிர்த்தியாகம் செய்த அனைத்து ஆன்மாக்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்! மாண்டவர்கள் நினைவுகள் என்றும் மறையாது!