மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது.
இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நகரும். அதன்பின் மத்திய வங்காள விரிகுடாவிற்கு வரும்போது அது புயலாக வலுப்பெறும்.
இந்த புயலுக்கு மாலைதீவு இட்ட ‘கானி( Kaani)’ என்ற பெயர் வழங்கப்படும்.
இந்த புயல் எதிர்வரும் 05.12.2026 அன்று இரவு திருகோணமலையின் ஊடாக ( கொட்டியாரக்குடாவுக்கு வடக்காக) கரையைக் கடந்து அதன் பின் மேற்கு நோக்கி நகர்ந்து, வவுனியாவை ஊடறுத்து மன்னார் மற்றும் புத்தளத்தினூடாக அரபிக் கடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலின் முழுப் பாதிப்பு வலயத்திற்குள் இலங்கை முழுவதும் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது இன்றைய நிலையில் இந்த நேரத்தில் மாதிரிகள் காட்டும் பாதை. இதில் மாற்றங்கள் நிகழலாம். இந்த பாதை அமையக்கூடாது என்பதே எனது விருப்பமும். சில மாதிரிகள் தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் எனவும் காட்டுகின்றன.