உலகளாவிய மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாமின் சில்சார் நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
உலகம் முழுவதும் போர்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டு மக்கள் மீது அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்காக நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். காங்கிரஸ் கட்சி ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அதில் இருந்து தவறிவிட்டது. மாறாக, மக்களிடையே பீதியை உருவாக்கவே அது முயல்கிறது என தெரிவித்தார்.