கல்முனை ஆதார வைத்தியசாலை உடை சர்ச்சை; கவன ஈர்ப்புப் போராட்டம்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரத்தினை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இனரீதியான பிரசாரத்தினை கண்டித்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் கவனஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களின் சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து வருகை தரும் புதிய நியமனம் பெற்ற 9 பேரின் சீருடை அவமதிப்பை எதிர்த்து இன்று (17) இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை 6 தொழில் சங்கங்களின் ஆதரவுடன் அமைதியாக சிற்றூழியர்களின் சங்கத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது.

அரச சுற்று நிரூபத்தின் அடிப்படையில் தாங்கள் சீருடைகளை அணிவந்துவரும் நிலையில் சுகாதார அமைச்சினால் 06-08-2026அன்று சிலர் நியமனங்களைப்பெற்று வைத்தியசாலைக்குவந்த சுகாதார சிற்றூழியர்கள் சிலர் சீருடை தொடர்பில் ஏற்படுத்திய குழப்பங்களை சில சக்திகள் இனவாத ரீதியில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை கண்டித்தும் அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தகோரியும் இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது சீருடையின்றி வருபவர்களை கடமைக்கு அனுமதிக்காதே,சமூக வலைத்தளங்களே எங்களைக்கொல்லதே,அனைவருக்கும் பொதுவான சீரூடையை அணிய அனுமதியுங்கள்,சீருடை தொடர்பான சுற்றுநிரூபத்தினை உடன் அமுல்படுத்து,வைத்தியசாலைக்கு எதிராக அவதூறுகளை பரப்பாதீர்கள் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மத ரீதியான சீருடைக்கு அனுமதி இல்லை, நிர்வாகத்திற்கு கட்டுப்படாத புதிய பெண் ஊழியர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுங்கள், சட்டம் கலாச்சார உடையை அங்கிகரிக்குமானால் இனி சீருடை என்ற விதியை அகற்றுங்கள்,சகல மதத்தவருக்கும் சீருடை விலக்கை தாருங்கள் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தேசிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ