கலை நிகழ்வுகளின் மூலமாக தமிழ்த்தேசிய அரசியலை தனது இசையின் மூலமாக வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிறுவியவர் தேனிசை செல்லப்பா -திருமாவளவன்

கலை நிகழ்வுகளின் மூலமாக தமிழ்த்தேசிய அரசியலை தனது இசையின் மூலமாக வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிறுவியவர் தேனிசை செல்லப்பாஎனவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் தனது அஞ்சலி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ்த்தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் இன்று காலமானார் என்கிற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன்.

தமிழ்த்தேசிய விடுதலைக் களத்தில் தனது எழுச்சிப் பாடல்களின் மூலம் பெரும்பங்காற்றிய தேனிசை செல்லப்பா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்!

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சிங்கிலிப்பட்டி என்னும் கிராமத்தைச் சார்ந்த செல்லப்பா அவர்கள், தொடக்ககாலத்தில் திராவிடர் கழகத்தின் மேடைகளிலும் பின்னர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் நாம் தமிழர் கட்சியின் மேடைகளிலும் பாடிவந்தார்.

பின்னர் தமிழ்த்தேசியக் களத்தில் ஈடுபாடு கொண்டு தமிழீழ விடுதலைக்கான பாடல்களை இயற்றி பாடினார். அவரது பாடல்கள் எளிய மக்களை ஈர்க்கும் வகையில் இருந்தது.

கலை நிகழ்வுகளின் மூலமாக தமிழ்த்தேசிய அரசியலை தனது இசையின் மூலமாக வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிறுவியவர்.

தமிழீழத் தேசிய விடுதலைக் களத்தில் இவரது பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் ‘ பாசறைப் பாணர் ‘ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கி சிறப்பித்தார்.

என் மீதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கொண்ட பற்றுதலால் விடுதலைச் சிறுத்தைகளுக்காக அவரே பல பாடலை இயற்றி இசையமைத்துப் பாடியுள்ளார்.

தனது எழுச்சிமிகு குரல்வளத்தால் உலகத்தமிழர்களிடையே தமிழ்த் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்திய தேனிசை செல்லப்பா அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் சீராக இல்லாமையினல் மேடைகளில் பாடாமல் ஓய்வு எடுத்து வந்தார்.  எனினும், கடந்த 2024 ஆம் ஆண்டு விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் நடைபெற்ற “மாவீரர் நாள்” நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ்த்தேசிய பாடல்களை எழுச்சியுடன் பாடினார். அதுவே அவர் பாடிய கடைசி மேடையாகவும்  அமைந்தது.

தமிழ்த்தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களின் இழப்பு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பு!

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளை (29.04.2026)  காலை சென்னை அருகே படப்பையில் நடைபெறும் அவரது நல்லடக்க நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் பெருந்திரளாக பங்கேற்று வீரவணக்கம் செலுத்திட வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி

sea

கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

June 14, 2026

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 14, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய

arju

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் அர்ச்சுனா இராமநாதன்

June 14, 2026

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய