கற்பிட்டியில் கடல் அட்டைகளுடன் ஏழு பேர் கைது

கற்பிட்டி, முகத்துவாரம் மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடல் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 1,146 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 03 டிங்கி படகுகளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் ‘விஜய’ கப்பலுக்குச் சொந்தமான உச்சமுனை கடற்படைப் பிரிவினர், கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் நடத்திய சோதனையில் 418 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகையும், அதில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, கீரிமுந்தல் கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது, மேலும் இரண்டு சந்தேகத்திற்குரிய டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன. இதன்போது 728 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகளுடன் 05 சந்தேக நபர்கள் கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 51 வயதுக்குட்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திலும், சந்தேக நபர்கள் புத்தளம் மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

i

கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

March 10, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் விசேட

Airbus_A330-200_-_SriLankan_Airlines_4R-ALG

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணத்தில் மாற்றம்?

March 10, 2026

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளமையினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஐரோப்பிய இடங்களுக்கான விமான பயணத்தை ஆப்கானிஸ்தான்

oor

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

March 10, 2026

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி, இன்று செவ்வாய்க்கிழமை(10) அன்று ஊர்காவற்றுறை

ha

பிரதமர் கலாநிதி ஹரிணிக்கு சர்வதேச தலைமைத்துவ விருது

March 10, 2026

பெண்களின் ‘ஊதியமற்ற’ வீட்டு உழைப்பானது குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

Blac

சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி; விசாரணைகள் ஆரம்பம்!

March 10, 2026

சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் கருப்பு கொடி பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

Int

இலங்கையில் வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு!

March 10, 2026

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம்

DIG

பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

March 10, 2026

விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட

Ir

இலங்கையில் உள்ள தமது நாட்டவரின் சடலங்களைப் மீளப்பெற ஈரான் நடவடிக்கை

March 10, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான ‘ஐரிஸ் டெனா’ கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில்

ceb

கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வேலைநிறுத்தம் தொடரும் – மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள்

March 10, 2026

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Accident

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

March 10, 2026

கொழும்பு – ரணால பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர்

MAr

நாட்டில் நிலக்கரி ஊழலால் மின்சாரக் கட்டணமும் உயரும் அபாயம் – எஸ்.எம். மரிக்கார்

March 10, 2026

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம்

Nam

அரசு முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாதமையே இன்று நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குக் காரணம்!

March 10, 2026

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது