மாமல்லபுரம்:
தவெக-வில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் இணைந்த மாபெரும் விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கூட்டணி முயற்சியைச் சாடினார். “இனி ஸ்டாலின் குடும்பம் லண்டனுக்குச் சென்றுதான் செட்டில் ஆக வேண்டும். கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதல்-அமைச்சராக ஸ்டாலின் இருப்பார்” என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.
தவெக எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்க ரூ.50 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும், தேர்தல் காலத்தில் முதல்வரை முடக்கத் தி.மு.க. காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாகவும், இதைத் தடுப்பதே தவெக-வின் தற்போதைய அரசியல் வியூகம் என்றும் தெரிவித்தார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் குறைந்து வருவதாகக் கூறிய அவர், தவெக அரசு எந்தத் தேர்தலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக உறுதிபடக் கூறினார்.
#AadhavArjuna #Tvk #DMK #MKStalin #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #Politics2026 #StalinCriticism #TamilNaduPolitics #PoliticalStance #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash