கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் என்புக் கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் நீதி கேட்டு ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ மாலை 5 மணியிலிருந்து  ALBERT CAMPBELL SQUARE, 150 Borough Dr, Scarborough, ON M1P 0B1 என்ற முகவரியில் BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

ஈழ வரலாற்றிலும் உலக மனித உரிமைப் பரப்பிலும் “செம்மணி” என்ற சொல் வெறும் ஒரு நிலப்பரப்பைக் குறிப்பது அல்ல மாறாக, அது ஆறாத காயத்தின், பேரழிவின், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான போராட்டத்தின் அடையாளச் சின்னமாக உள்ளது.

1995-1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபோது, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் பொதுமக்களும் சித்திரவதைகளுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் உள்ளாக்கப்பட்டனர். 1998 இல் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த சாட்சியத்தினைத் தொடர்ந்து செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

நீண்ட தசாப்தகால மௌனத்திற்குப் பிறகு, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் அகழ்வாராய்ச்சிகளில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என சகல வயதுத் தரப்பினரதும் நூற்றுக் கணக்கான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.

இது, தங்கள் உறவுகளைத் தேடிப் போராடும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஆறாத துயரத்தையும் அதிர்ச்சியையும் மீண்டும் மீண்டும் அளித்துக்கொண்டிருக்கின்றது.

எமது மண்ணில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால வடுக்கள், நில அபகரிப்புகள் மற்றும் நீதியின்மைகள்… தொடரும் சூழலில் ‘செம்மணி மனிதப் பேரவலத்தை’ சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து பன்னாட்டு விசாரணைக்குரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டியது புலம்பெயர் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பு. உரிமைக்குரல் கொடுக்க நாற் திசைகளிலுமிருந்து ஒன்று திரண்டு ‘விழித்தெழு தமிழா’ நிகழ்வுக்கு வலுச் சேர்ப்போம்!

gan

பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார்

mi

மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்!

August 1, 2026

அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில்

co

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers)

donadltrumps

“அமைதி வாரியம்” எட்டிய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் “மிகவும் மகிழ்ச்சியாக” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கருத்து

August 1, 2026

காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதமேந்திய பலஸ்தீனக் குழுக்களை முழுமையாக ஆயுதமேற்கச் செய்வதற்காக, தன்னுடைய “அமைதி வாரியம்”

ita

தெற்கு இத்தாலியில் பூமியதிர்ச்சி : கட்டடங்கள் சேதம்

August 1, 2026

தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகில் அமைந்துள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் வெள்ளிக்கிழமை (31ஆம் திகதி) 4.7 ரிச்டர் அளவில்

Sanak

கடந்த காலங்களைப் போல் இல்லாமல் நீதிமன்றங்களின் சுயாதீனமான செயற்பாடுகள் வரவேற்புக்குரியவை – சாணக்கியன்

August 1, 2026

கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது பதவி நிலைகளைப் பாராமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட்டு, பல தீர்ப்புகளை வழங்கி வருவது

vad

வட்டுவாகல், கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்!

August 1, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு

gun

ரத்மலானையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

August 1, 2026

ரத்மலானை, கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் இருந்த நபர்

nel

நெல்வயல்களை முற்றாக நாசமாக்கிய காட்டுயானைகள்

August 1, 2026

அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட பல ஏக்கர் நெல்வயல்கள் காட்டுயானைகளின் தாக்குதலினால் முற்றாக சேதமடைந்துள்ளன.

arrest

சோபால புளியங்குளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

August 1, 2026

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் கிராமத்தில் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக

fila

பிரபல உணவகத்தில் தீ விபத்து

August 1, 2026

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து

sri

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயில் வீதி மீண்டும் மூடல்

August 1, 2026

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக திறக்கப்பட்ட