கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக பல கோடி ரூபா மோசடி

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் 4 கோடி 97 இலட்சத்து 9 ஆயிரத்து 30 ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர மேலதிக நீதவான் ஐ.எம்.எஸ். பண்டார இலங்சிங்க உத்தரவிட்டுள்ளார்.

கொச்சிக்கடை, பள்ளன்சேனை, மார்ஷல் வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

களனி, ஹிம்புடுவெல்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பேலியகொட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபர் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து ஆறு சந்தர்ப்பங்களில் தனது வங்கிச் கணக்கிற்கு பணத்தைப் பரிமாற்றம் செய்துகொண்டமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், இதில் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தேடப்பட்டு வருவதால் சந்தேகநபருக்கு பிணை வழங்க கூடாதென பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அடுத்த வழக்குத் தவணையின் போது விசாரணைகளின் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்குப் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

namal

மாறிவரும் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது

March 18, 2026

உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக

kava

மலையக மக்களின் மீள்கட்டமைப்பு: கோரிக்கை ஆவணக் கையொப்பமிடல்!

March 18, 2026

‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட ஒன்றுகூடலும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிடும் நிகழ்வும்

vav

நெல் கொள்வனவு தொடர்பில் வவுனியா விவசாயிகள் முறைப்பாடு

March 18, 2026

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறான இடர்பாடுகளும்

hurm

மாபெரும் குண்டு வீச்சுக்களால் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

March 18, 2026

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுங்கு குழிகளை ஊடுருவும்

har

நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

March 18, 2026

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய

pra

பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

March 18, 2026

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

rav

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

March 18, 2026

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி

chi

இணையத்தள மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

March 18, 2026

தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க

amb

அக்கரைப்பற்று பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு!

March 18, 2026

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால்

toru

சுற்றுலாத் துறை அமைச்சின் விசேட அறிவிப்பு

March 18, 2026

சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளுக்காகப் பதிவு செய்யும் முறைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு

us

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

March 18, 2026

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையமான ‘கிரீன் ஸோன்’ பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகம் மீண்டும்

Sigh

குடிவரவு மோசடி சந்தேக நபர் விடுவிக்கப்பட்டு கனடா மீது வழக்குத் தொடர அனுமதி

March 18, 2026

40 வயதான இந்தியரான குர்பிரீத் சிங், கனடா அரசாங்கம் மற்றும் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் (CBSA) ஊழியர்கள் மீது