கனடாவிலிருந்து அல்பெர்டா பிரிய வேண்டுமா; சுதந்திர மனு இயக்கத்தின் முடிவு நெருங்குகிறது!

கையொப்பங்களை சேகரிக்க இன்னும் சுமார் ஆறு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அல்பெர்டா சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள் குடிமக்கள் முன்னெடுத்த மனு இயக்கத்திற்காக போதுமான கையொப்பங்களை திரட்ட முயற்சி செய்து வருகின்றனர். இந்த மனு வெற்றியடைந்தால், அல்பெர்டா கனடாவிலிருந்து பிரிய வேண்டுமா என்பது குறித்து மாகாணம் முழுவதும் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் அந்த இயக்கம் வெற்றி பெற்று, பொதுசன வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்காளர்கள் பிரிவினையை ஆதரித்தாலும் கூட, அது உடனடியாக சுதந்திரத்தை அர்த்தப்படுத்தாது என்று அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக, ஒட்டாவா, பிற மாகாணங்கள் மற்றும் ஏனைய இன மக்களுடன் நீண்டதும் சிக்கலானதும் ஆன பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பேராசிரியரான எர்ரோல் மெண்டஸ் கூறுகையில், சுதந்திரத்திற்கு செல்லும் பாதையில் பல முக்கியமான சட்ட மற்றும் அரசியல் தடைகள் இருக்கும் எனத் தெரிவித்தார்.

“வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டாலும், அதன் ஆரம்ப தகுதித் தடைகளை கடந்து சென்றாலும் கூட, ஒவ்வொரு பேச்சுவார்த்தை கட்டத்திலும் அல்பெர்டா உண்மையில் ஒரு சுதந்திர நாடாக மாறுவது மிகவும் கடினமானதாக இருக்கும்,” என்று மெண்டஸ் கூறினார்.

1990களில் கியூபெக் சுயாட்சி வாக்கெடுப்புக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட கனடாவின் ‘கிளாரிட்டி சட்டம்’ படி, எந்த மாகாணமும் ஒருதலைப்பட்சமாக நாட்டை விட்டு பிரிய முடியாது.

அதற்கு பதிலாக, ஒரு பொதுச்சன வாக்கெடுப்பில் தெளிவான கேள்வியும் தெளிவான பெரும்பான்மை ஆதரவும் இருந்தால், கூட்டாட்சி அரசு அந்த மாகாணத்துடன் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.

அந்த பேச்சுவார்த்தைகள் ஒட்டாவாவை மட்டும் அல்லாது, பிற மாகாணங்களையும் தாயக இன மக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஏனெனில் அவர்களின் ஒப்பந்த உரிமைகள் கனடாவின் அரசியலமைப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்த வாரம், லண்டனில் நடைபெற்ற சந்திப்பில் பல முதல் நாட்டு (First Nations) தலைவர்களும் அல்பெர்டாவின் பிரிவினை இயக்கம் குறித்து கிங் சார்ல்ஸுடன் சந்தித்து கவலை வெளியிட்டனர்.

மெண்டஸ் கூறுகையில், எதிர்கால பேச்சுவார்த்தைகள் ஓய்வூதியம் போன்ற பல சிக்கலான விடயங்களை உள்ளடக்கும் என்று தெரிவித்தார்.

“அல்பெர்டா ஓய்வூதிய நிதியை கனடா ஓய்வூதிய நிதியிலிருந்து எவ்வாறு பிரிப்பது என்பது மிகப்பெரிய விவாதமாக இருக்கும்,” என்றார்.

மேலும், இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான கேள்விகளும் அவசியமாக தீர்வு காணப்பட வேண்டியவையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

45666

கொக்குதொடுவாய் – குஞ்சுக்கால்வெளியில் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்த நடவடிக்கை!

March 15, 2026

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில், கொக்குதொடுவாய் குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு மகாவலி

leba

லெபனானில் இதுவரை 850 பேர் வரை பலி

March 15, 2026

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இதுவரையில் 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில்

56699

சாரதிகள் கடும் அவதி

March 15, 2026

QR நடைமுறையின் கீழ் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து, மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்

acc

அமைச்சரின் சகோதரர் விபத்தில் பலி

March 15, 2026

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வீதி விபத்தில், பொதுப் பாதுகாப்பு

popp

அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது குறித்து போப் ஆழ்ந்த கவலை

March 15, 2026

த்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து

4555

இனிவரும் காலங்களில் எரிபொருளை முறையாக விநியோகிக்க பொலிஸாரின் உதவி!

March 15, 2026

இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும்

hea

அதிக வெப்பத்துடனான காலநிலை; 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

March 15, 2026

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ,

ha

முன்பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்

March 15, 2026

027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளும் வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

fff

போதைப்பொருளுடன் பயணித்த படகு ஒன்று கண்டுபிடிப்பு

March 15, 2026

போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

GMOA

அரச வைத்திய அதிகாரிகள் அவசர கோரிக்கை

March 15, 2026

QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

arr

இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இருவர் கைது

March 15, 2026

பொத்துவில், பானமை – சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் காட்டெருமை (குளுமாடு) இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இரு

pon

’பொன் அணிகளின் போர்’: சமர் சமநிலையில் நிறைவு

March 15, 2026

‘பொன் அணிகளின் போர்’ என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான