பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறது. இது சமூகத்திற்கு ஆதரவாக ஒன்றிணையும் GTA முழுவதிலுமுள்ள அமைப்புகளின் தாராளத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி அங்கீகரிக்கும் பட்டியலாகும் என பிராம்டன் நகர சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான யுனைடெட் வே ஊழியர் பிரச்சாரத்திற்கு (United Way Employee Campaign)பல்வேறு நிதிசேகரிப்பு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் தன்னார்வமாகச் சேவையாற்றிய அல்லது ஆதரவு அளித்த அனைத்து பிராம்டன் நகர ஊழியர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாம் சகலரோடும் ஒன்றிணைந்து, நண்பர்களும் அயலவர்களும் வளர்ச்சியடைய தேவையான அடிப்படை வசதிகளான உணவு, இருப்பிடம், வேலைவாய்ப்பு, மனநல ஆதரவு உள்ளிட்டவற்றுடன் அவர்களை இணைக்க உதவி செய்கிறோம் என பிராம்டன் நகரசபை மேலும் தெரிவித்துள்ளது.