மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
புதன்கிழமை வர்த்தக முடிவில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெயின் விலை 8.7% அதிகரித்து, ஒரு பேரல் 100 டொலர் என்ற எல்லையைத் தொட்டுள்ளது. அதேபோல், அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் விலையும் 8.7% உயர்ந்து, பீப்பாய் ஒன்று 94.8 டொலராக பதிவாகியுள்ளது.
G7 நாடுகளின் முடிவு: உலகளாவிய எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த, சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடுகளான G7 நாடுகள், தங்களின் கையிருப்பிலிருந்து சாதனை அளவாக 400 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை சந்தைக்கு விடுவிக்க நேற்று ஏகமனதாக உடன்பட்டிருந்தன.
இவ்வளவு பெரிய அளவிலான கையிருப்பு எரிபொருளை சந்தைக்கு விடத் தீர்மானித்த போதிலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்தியுள்ள இடையூறுகளே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.