ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாதுவ, பாலிகாவ வீதியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய கோதுவகெ தொன் அனுராத இந்திக பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
வியாழக்கிழமை (05) காலை அளுத்கமையிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற இலக்கம் 317 ரயிலில் ஏற முயன்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
வாதுவ ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீண்டும் புறப்படத் தொடங்கிய போது, அதில் ஏற முயன்ற கால் வழுக்கி ரயிலின் படிக்கட்டுக்கு கீழே விழுந்துள்ளார். இதில் ரயிலுடன் மோதிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.