ஒப்புரவான அபிவிருத்திக்கு ஏற்றவகையில் யாழ்ப்பாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் – அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ யாழில் தெரிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கௌரவ போராசிரியர் (கலாநிதி) அனில் ஜெயந்த பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.04.2026). மாலை 06.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு வருகை தந்த வ அமைச்சர்,  பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்ற அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், மாவட்டத்தின் புள்ளிவிபரங்கள் மற்றும் தேவைப்பாடுகளை முன்வைப்பின் (Presentation) ஊடாக முன்வைத்தார்.
மேலும், இக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான  எஸ். கபிலன் அவர்களால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2027 – 2028 ஆண்டுக்களில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகள் முன்வைப்பின் ஊடாக முன்வைக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கான அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு விடயங்கள்  அமைச்சரால் ஆராயப்பட்டது. இதன் போது முதலீடு மேற்கொள்வதற்கு – முதலீட்டுச் சபை மற்றும் ஏனைய திணைக்களங்களால் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான அனுமதியினை விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், 2027 மற்றும் 2028 ற்காக பாரிய திட்டங்களின் சாத்தியப்பாடான திட்டங்களை எதிர்வரும் ஆண்டுகளின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதாகவும்  அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. மேலும், மின்மாற்றிக்கான இயலளவு போதுமானதாக இல்லாத காரணத்தினால் சூரிய கலன் பொருத்துவதற்கான அனுமதியினை வழங்க முடியாதிருப்பதாகவும், அதற்கு இரண்டு ஆண்டுகள் எடுக்கும் எனவும், எனினும் மாற்று ஒழங்குகளுக்கான நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சரால் மேலும் தெரிவிக்கப்பட்டது. மேலும், யாழ்ப்பாணத்தில் ஒப்புரவான அபிவிருத்திக்கு (Balanced Development) ஏற்றவகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கெளரவ அமைச்சரால் தெரிவிக்கப்பட்டதுடன், மாகாண மாவட்ட திட்ட முன்மொழிவுகளை ஒருங்கிணைந்த வகையில் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான  சண்முகநாதன் சிறிபவானந்தராஜா,  கருணநாதன் இளங்குமரன்,  ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், திறைசேரியின் பணிப்பாளர் நாயகம், தேசிய திட்டமிடல் பணிப்பாளர் நாயகம், தேசிய அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம், மேலதிக பணிப்பாளர் நாயகம், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், திணைக்களங்களின் தலைவர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்