நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று திங்கட்கிழமை (12) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
09 மாவட்டங்களுக்கு: சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.
05 மாவட்டங்களுக்கு: மஞ்சள் எச்சரிக்கை (Amber Alert) விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.