ஐ.நாவின் மறுசீரமைப்புகளுக்கு இலங்கை ஒத்துழைக்கும்!

ஐக்கிய நாடுகள், இலங்கைக்கு தவிர்க்கமுடியாத ஒரு பங்காளராகும் என இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81 ஆவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த வௌிவிவகார அமைச்சர், உலகில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையை மேலும் உள்ளடக்கியதாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு, அதற்குள் அர்த்தமுள்ள மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதை இலங்கை ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்கால உலக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், புதிதாக உருவெடுக்கும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதில் அதன் நிறுவனங்கள் திறம்படச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையிலும், ஐ.நா அமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் காலநிலை மாற்றம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், காசா பகுதிக்குத் தடையற்ற மனிதநேய உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும், நியாயமான சர்வதேசக் கடன் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகளாவிய நச்சு வாயுக்களின் உமிழ்வுகளுக்குக் மிகக் குறைவாகப் பங்களித்த நாடுகளே காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளைத் தொடர்ந்து அனுபவித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது சுட்டிக்காட்டினார்.

‘டித்வா’ புயல் இலங்கையில் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்ததுடன், 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து, வாழ்வாதாரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது.

காலநிலை நீதி என்பது உடனடியாகச் சாத்தியப்பட வேண்டிய ஒரு யதார்த்தமாக மாற வேண்டும்.

இலங்கை 2030 ஆம் ஆண்டிற்குள் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும், 2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலைமையையும் (carbon neutrality) எட்டுவதற்கான இலக்குகளை நோக்கிச் சரியாகப் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளிலும் நிலவும் மக்களின் துயரங்கள் குறித்து இலங்கை தொடர்ந்து கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பாதுகாப்புச் சபையின் போர்நிறுத்தத் தீர்மானத்தைப் பின்பற்றுமாறும், பொதுமக்களுக்கு மனிதநேய உதவிகள் தடையின்றிச் சென்றடைவதை அனுமதிக்குமாறும், கசாவின் மீட்சி மற்றும் மறுசீரமைப்பிற்கு உடனடி முன்னுரிமை அளிக்குமாறும் அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், 1967 ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகளுக்குள் இஸ்ரேலுடன் இணைந்து இயங்கும் ஒரு சுதந்திரமான பாலஸ்தீன நாட்டிற்கான இலங்கையின் ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கடந்த மார்ச் மாதம் தனது பிராந்திய கடற்பரப்பிற்கு அருகில் ஆபத்தில் சிக்கிய ஒரு கப்பலிலிருந்து மாலுமிகளை இலங்கை மீட்டதை சுட்டிக்காட்டிய ஹேரத், நாடு தனது நடுநிலைமையைப் பாதுகாக்கும் அதே வேளையில் மனித உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் 2022 நெருக்கடிக்குப் பிறகு இலங்கை மெக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்துள்ள போதிலும், கடன் மற்றும் வெளிப்புறப் பொருளாதார அதிர்ச்சிகளால் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே உள்ளது என்றார்.

சர்வதேச நிதி அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், கடன் மற்றும் அபிவிருத்தி நிதி தொடர்பில் நியாயமான விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தனது கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையின் உள்நாட்டு மோதலினால் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் நிறுவனங்களை வலுப்படுத்தி வருவதாகவும், அரசியல் தலையீடுகள் இன்றி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளையும் வழக்குத் தொடர்தல்களையும் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்த வௌிவிவகார அமைச்சர், தொழில்நுட்பத்தை அனைவரும் சமமாக அணுகக்கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனவும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவின் (AI) நெறிமுறை சார்ந்த பயன்பாடு குறித்து இலங்கை தேசிய வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

828392539_28086446187693270_7108244713637006008_n

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது ?கோட்டா பதில் சொல்லவேண்டும் -கோட்டாபய நீதிமன்றத்தில் ஆஜரானவேளை ஆர்ப்பாட்டம்

September 29, 2026

முன்னணி சோசலிசக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட, லலித் மற்றும் குகன் ஆகிய இரு சகோதரர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான

PAr

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றல்: மேயர் பாட்ரிக் பிரவுன் கடும் கண்டனம்!

September 29, 2026

யாழ்ப்பாணம் நல்லூர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலையை இலங்கை பொலிஸார் அகற்றிய சம்பவத்திற்கு கனடாவின் பிராம்ப்டன் நகர

Nalinda Jayatissa Cabinet Meet-790605

நீதிமன்றத்திற்கு தெரிவி;த்த பின்னரே திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் அகற்றினர்- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

September 29, 2026

யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் தீலிபனின் சிலை அது தொடர்பான விடயங்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்த பின்னரே அகற்றப்பட்டது என அமைச்சரவை பேச்சாளர்

shiranthi brother

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு – சிராந்தியின் சகோதரரும் கைது

September 29, 2026

கொழும்பு பொரளைப் பகுதியில் அமைந்துள்ள ரூ. 1.58 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய அரச காணிக் தொடர்பில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள்

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலை

September 29, 2026

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயல்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்

828539158_28512119721775499_3546511580812882201_n

யாழ் நகரை வண்ணமயமாக்கிய வடக்கு மாகாணத்தின் பண்பாட்டுப் பெருவிழா

September 29, 2026

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா, நமது மண்ணின் கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் தொன்மையான வாழ்வியலை

velan1

சிலையை அகற்றியது சிறீலங்கா பொலிசார்.. அமைச்சர் பட்டப் பகலில் பச்சை பொய் கூறுகிறார். வேலன் சுவாமிகள் காட்டம்.

September 29, 2026

யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிடத்திலிருந்து திலீபனின் திரு உருவச்சிலையை அகற்றியது மாநகர சபை அல்ல சிறீலங்கா பொலிசார்

826047743_2538007303334500_2249341759957978704_n

திலீபனின் சிலை அகற்றப்பட்டமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுயாதீன விசாரணையை மேற்கொள்ளவேண்டும் – தென்பகுதி சட்டத்தரணி வேண்டுகோள்

September 29, 2026

தியாகதீபம் தீலிபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தென்பகுதியை சேர்ந்த

gaze

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சட்டமூல வரைவு வர்த்தமானியில்

September 29, 2026

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சட்டமூல வரைவு வர்த்தமானியில் நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது. நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய கொள்கைகளின் மூலம்

vi

ஐ.நாவின் மறுசீரமைப்புகளுக்கு இலங்கை ஒத்துழைக்கும்!

September 29, 2026

ஐக்கிய நாடுகள், இலங்கைக்கு தவிர்க்கமுடியாத ஒரு பங்காளராகும் என இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்

arrest

தெல்லிப்பழையில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

September 29, 2026

சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டிப்பர் மற்றும் மோட்டார் சைக்களில் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி

ar

அர்ச்சுனா, ஹரிஸ் உள்ளிட்ட அறுவருக்கு நீதிமன்றம் அழைப்பு

September 29, 2026

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக அவதூறு பரப்பிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்