எரிவாயு தட்டுப்பாடு; மஞ்சள் சிலிண்டருக்கு நீலம் பூசிய மூவர் கைது

மஞ்சள் எரிவாயுத் (Laugfs Gas) தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு மாற்றீடாக, மஞ்சள் எரிவாயுச் சிலிண்டர்களுக்கு நீல நிற வண்ணம் பூசி, மோசடியான முறையில் விற்பனையாளர்களை ஏமாற்றி ‘லிட்ரோ’ (Litro) எரிவாயுச் சிலிண்டர்களைக் கொள்வனவு செய்து அவற்றை விற்பனை செய்த ஜகத் மோசடி தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொட்டதெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள், திவுலப்பிட்டிய, குடகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த ‘லாஃப்ஸ்’ எரிவாயு முகவர் ஒருவரும், நீல நிறம் பூசப்பட்ட போலி எரிவாயுச் சிலிண்டர்களை விற்பனை நிலையங்களுக்கு வழங்கி, லிட்ரோ எரிவாயுச் சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதற்காக முச்சக்கர வண்டியொன்றைப் பயன்படுத்தி இம்மோசடியில் ஈடுபட்ட தந்தை – மகன் இருவருமே எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகளை முன்னெடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நீல நிறம் பூசப்பட்ட 40 வெற்று எரிவாயுச் சிலிண்டர்களும், அவ்வாறான சிலிண்டர்களைக் கொடுத்துப் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும், எரிவாயு நிரப்பப்பட்ட 3 லிட்ரோ எரிவாயுச் சிலிண்டர்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையிலும், பிரதான சந்தேகநபரின் வீட்டிலும் இருந்து பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொட்டதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிவாயு விற்பனை முகவர் ஒருவர், தனது எரிவாயு விற்பனை நிலையத்தில் இருந்த வெற்று லாஃப்ஸ் எரிவாயுச் சிலிண்டர்களைப் போலியாக லிட்ரோ எரிவாயுச் சிலிண்டர்களாகக் காட்டுவதற்காக நீல நிற வண்ணம் பூசியுள்ளார். பின்னர், அந்த வெற்றுப் போலி நீல நிறச் சிலிண்டர்களைப் பிரதேசத்திலுள்ள லிட்ரோ விற்பனை நிலையங்களுக்கு வழங்கி, உண்மையான லிட்ரோ எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்களைக் கொள்வனவு செய்து, எரிவாயுவுடன் கூடிய சிலிண்டர் ஒன்றை 20,000 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்துள்ளமை ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்திச் சந்தேகநபர் இம்மோசடியைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

பிரதான சந்தேகநபரான லாஃப்ஸ் எரிவாயு முகவர், நீல நிறம் பூசப்பட்ட போலி வெற்று எரிவாயுத் தாங்கிகளை, முச்சக்கர வண்டியொன்றை வைத்திருந்த தந்தை – மகன் ஆகியோரைக் கொண்டு பிரதேசத்திலுள்ள லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி, எரிவாயு நிரப்பப்பட்ட உண்மையான லிட்ரோ எரிவாயுச் சிலிண்டர்களை வரவழைத்துள்ளமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

79

சமூக ஊடகங்களில் சாதிக்கும் 96 வயதுப்பெண்!

November 22, 2026

80, 90 வயதிலும் சமூக ஊடகங்களில் சாதிக்க முடியுமா? முடியும் என்று நிரூபிக்கின்றனர் சில பாட்டிகள்! அமெரிக்காவைச் சேர்ந்த

arrest

எரிவாயு தட்டுப்பாடு; மஞ்சள் சிலிண்டருக்கு நீலம் பூசிய மூவர் கைது

November 22, 2026

மஞ்சள் எரிவாயுத் (Laugfs Gas) தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு மாற்றீடாக, மஞ்சள் எரிவாயுச் சிலிண்டர்களுக்கு நீல நிற வண்ணம்

jud

முல்லைத்தீவில் மாணவியை வன்புணர்ந்த பூசகருக்கு தண்டனை உறுதி

November 22, 2026

முல்லைத்தீவில் 2011ஆம் ஆண்டு தனது இல்லத்தில் தங்கியிருந்த 17 வயது இடம்பெயர்ந்த மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக்

rupe

போலி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்த ஓட்டோ சாரதி; ஆசிரியையிடம் 34 லட்சம் ரூபாய் மோசடி

November 22, 2026

பொலிஸ் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் (SI) சீருடையில் பாடசாலையொன்றுக்கு அந்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருநாள் வந்துள்ளார். போதைப்பொருட்களின் தீமைகள்

rupe

போலி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்த ஓட்டோ சாரதி; ஆசிரியையிடம் 34 லட்சம் ரூபாய் மோசடி

November 22, 2026

பொலிஸ் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் (SI) சீருடையில் பாடசாலையொன்றுக்கு அந்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருநாள் வந்துள்ளார். போதைப்பொருட்களின் தீமைகள்

aru

‘அரும்புகள் வாசிப்புக் கழகம்’ ஆரம்பம்

November 22, 2026

இரத்தினபுரி, வேவல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் “அமரர் ரமணி பாலேந்திரா நினைவு நூலகம்” சனிக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது. அமரர் ரமணி

902143220_122227379858360374_6202966544825060215_n

Behind Me Media தலைமை அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரம் 2026

November 22, 2026

2026 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாவீரர்

strike

நாளை பல அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் போராட்டம்

November 22, 2026

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளைய தினம் (23) அரச சேவையின் பல

jaff

யாழ்.பல்கலை மாணவர் மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பம்

November 22, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

arr

பாதசாரி மீது தாக்குதல் நடத்திய ஜீப் சாரதி கைது

November 22, 2026

கொழும்பு, பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் பாதசாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஜீப் வண்டி சாரதி

MediaFile_20261122_060307_911

நகை உற்பத்தி நிலையத்தில் திருட்டு!

November 22, 2026

ஹட்டன் நகரில் உள்ள கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இயங்கிவரும் தங்க ஆபரண உற்பத்தி நிலையம் ஒன்றில் நேற்று (21)திருட்டுச்

ra

அரசியல் குழு மோதல்: பிரித்தானியாவை சர்ச்சைகளுக்குரிய களமாக மாற்றக்கூடாது – அரசியல் விமர்சகர் ரகிப் எஹ்சான்

November 22, 2026

கிழக்கு லண்டனில் பங்களாதேஷைச் சேர்ந்த போட்டி அரசியல் குழுக்களுக்கிடையே அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல்கள், பிரித்தானியாவில் சமூக ஒருங்கிணைப்பு மற்றும்