முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி விவகாரம் குறித்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே முன்னாள் ஜனாதிபதி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினால் எயார்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது