“எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப் போதைப்பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வவுனியா தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பமான இந்த நடைபயணம் பழைய பேருந்து நிலையப் பகுதி வரை ஊர்வலமாக சென்றிருந்தது.
இந்நடைபயணத்தில் இளைஞர், யுவதிகள் என பலர் கலந்துகொண்டதுடன், அவர்கள் போதை பாவனைக்கு எதிரான பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.