உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இந்த ஆண்டில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள்!

இந்த ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான தொடக்க விழாக்கள் நேற்று(14) நாடு முழுவதும் இடம்பெற்றதாக அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, புத்தளம் மாவட்ட தொடக்க விழா பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் நடைபெற்றது.

ஹம்பாந்தோட்டை திட்டத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் ஆரம்பித்து வைத்தார்.

விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் குருணாகலில் தொடக்க விழா நடத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வர்த்தக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், கட்டிடப் பொருள் தர பரிசோதனைக்கூடங்கள், கொங்ரீட் பட்டறைகள், குடிநீர் திட்டங்கள், விவசாய அபிவிருத்தி திட்டங்கள், நெல் உலர்த்தும் மையங்கள், சுற்றுலா வசதிகள் அபிவிருத்தி, உள்ரங்க விளையாட்டு அரங்கங்கள், சூரியமின் சக்தி அமைப்புகள், முன்பள்ளிகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள், உள்ளூர் உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் மையங்கள், உணவகங்கள், ஈமச்சடங்கு மண்டபங்கள் மற்றும் மின்மயானங்கள், சுற்றுலா பங்களாக்கள் மற்றும் விடுதிகள், கேட்போர் கூடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், மின்சார வாகனங்களை மறுநிரப்பல் செய்யும் மற்றும் வாகன சேவை மையங்கள் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளன.

இதற்கிடையில், கிராமத்துடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மிகச்சிறிய ஆட்சிப் பிரிவான உள்ளூராட்சி மன்றங்கள் நிதி ஒழுக்கமற்ற நிர்வாகங்களின் கீழ் நீண்டகாலமாக இடம்பெற்ற வீணடிப்பு, தவறான பயன்பாடு மற்றும் முறைகேடுகள் காரணமாகவும், பல வருடங்களாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி நடத்தப்பட்டு வந்தமையினாலும் கடுமையான திறனற்ற நிறுவனங்களாக மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகின.

சீர்குலைந்திருந்த அந்த சேவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட ‘மறுமலர்ச்சியின் நகரம்’ தேசிய திட்டத்தின் கீழ் பெருமளவிலான நிதியை ஒதுக்கி பல அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் கீழ் 800 கிராமிய பாலங்களைக் கொண்ட பிரம்மாண்ட திட்டம் கடந்த ஜூலை 14 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிடுகிறது.

‘மறுமலர்ச்சியின் நகரம்’ தேசிய திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் அதிகாரப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகவும், உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தங்கியிருக்காமல் பொருளாதார ரீதியாக சுயாதீன நிறுவனங்களாக சுயமாக கட்டியெழுப்பப்படும் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் பொருட்டும், புதிய வருமான வழிகளை உருவாக்கிக்கொள்ள அல்லது நிலவும் வருமான வழிகளை மேம்படுத்திக்கொள்ள 2026 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் மூலதன நிதி ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் வருமானம் ஈட்டும் திட்டங்களுக்காக செயல்திறன் அடிப்படையிலான மூலதன மானியமாக 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அதற்கு அமைவாக 2026 ஆம் ஆண்டிற்கான திட்ட யோசனைகளை கோரும் நடவடிக்கை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களினதும் வருமான மட்டம், கடந்த ஆண்டின் செயல்திறன் மற்றும் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு செலவாகும் முழுத் தொகையையும் 5 வருட காலத்திற்குள் ஈட்டிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட சாத்தியக்கூறு ஆய்வொன்று விசேட குழுவொன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பின்னரே இத்திட்ட யோசனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

hindutamil-prod_2026-06-03_rnr6gr52_1354313

“கோப்புகள் இருப்பதாகக் கூறி மிரட்டக் கூடாது!” – சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு

August 25, 2026

மயிலாடுதுறை: செய்தியாளர் சந்திப்பு மயிலாடுதுறையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று

9868_23_3_2025_18_22_53_1_EPS_ADMK_3

வரும் தேர்தலை அ.தி.மு.க., ஐ.ஜே.கே. கூட்டணி இணைந்து சந்திக்கும்: எடப்பாடி பழனிசாமி!

August 25, 2026

செங்கல்பட்டு: பாரிவேந்தரின் 88-வது பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில், இந்திய ஜனநாயகக் கட்சியின்

image_0b1598bfd8

மன்னார் வளைகுடா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு: சர்வதேச நிறுவனங்களுக்கு இலங்கை அழைப்பு

August 25, 2026

இலங்கை தனது மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவை பெட்ரோலிய ஆய்வுகளுக்காகச் சர்வதேச எரிசக்தி

easter bomb

உயிர்த்தஞாயிறு தாக்குதல் வழக்கு – செப்டம்பர் 22 திகதி தீர்ப்பு

August 25, 2026

2019ம் ஆண்டு உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22

gr

ஜெர்மன் விமான நிலையத்தை தகர்க்க முயற்சி

August 25, 2026

விளாடிமிர் புட்டின் ஆதரவுடன் ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தை செம்டெக்ஸ் (Semtex) வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone)

arr

திருட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் யாழில் கைது!

August 25, 2026

யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி

acc

நுவரெலியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து

August 25, 2026

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து நுவரெலியாவிற்கு

Sale

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம்

sss

சுடுகாட்டுக்கு ஏற்பாடு; உயிருடன் வந்த கைதி!

August 25, 2026

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர்

water cut

களனி ஆற்றில் இரசாயன கழிவுகள் – தனியார் நிறுவனத்தின் அத்துமீறல் – கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது

August 25, 2026

தனியார் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இரசாயனகழிவுகள் சுற்றுசூழலில் கலந்ததை தொடர்ந்து களனி ஆற்றின் நீர் தரத்தில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதன்

Jail-1-550x344

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பொலிஸாரிடம் யோசனை கோரல்

August 25, 2026

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்க

suresh11

சுரேஸ் சாலேக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

August 25, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற