உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் இம் மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த உத்தேச விலை உயர்விற்கு பிரதான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.