உயர்தரப் பரீட்சை; ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்குமாறும் அறிவுறுத்தல்

தற்போது நாடு முழுவதும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்கிக்கொள்ளுமாறும், பள்ளிவாசல்களில் வெளிப்புற ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கும் அறங்காவலர்களுக்கும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவர்கள், பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் வெள்ளிக்கிழமைகளில் (ஆகஸ்ட் 14, 21, 28 மற்றும் செப்டெம்பர் 04 ஆகிய திகதிகளில்) ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்கி, தொழுகையையும் சேர்த்துப் பிற்பகல் 12:45 மணிக்கு முன்னதாக நிறைவு செய்துகொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் இருக்கும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பரீட்சை நடைபெறும் நேரங்களில் — குறிப்பாக, ளுஹர் மற்றும் அஸர் தொழுகை நேரங்களில் — வெளிப்புற ஒலிபெருக்கிப் பயன்பாட்டின் அளவைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

முடிந்தவரை பள்ளிவாசலின் உள்ளக ஒலிபெருக்கிகளை (Internal Speakers) மட்டும் பயன்படுத்தி, மாணவர்கள் சிரமமின்றிப் பரீட்சை எழுதுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு பள்ளிவாசல்களின் கதீப்மார்களுக்கும் முஅத்தின்மார்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகின்றது.”

இவ்விடயம் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுவது கண்காணிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.