உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடிக்குள் சிக்கும் நிலையில் இலங்கை – சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர் எச்சரிக்கை

2022 ஆம் ஆண்டு முகங்கொடுத்த தீவிர பொருளாதார நெருக்கடியின் பின்னர், வெளியக அதிர்ச்சிகளைக் கையாள்வதற்கான இலங்கையின் இயலுமை பலவீனமான நிலையிலேயே உள்ளது. இத்தகைய பின்னணியில் மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்து நீடித்தால், அது நாட்டின் பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைப்பதுடன், நாட்டை உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச்செலவு நெருக்கடிக்குள் தள்ளும் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் கலாநிதி ரஜினி கமகே எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்களால் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ரஜினி கமகேவினால் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத்தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் போரின் விளைவாக ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்தியிருந்த உலகளாவிய எரிபொருள் விநியோகச்சங்கிலி மற்றும் கப்பல் போக்குவரத்துப்பாதை என்பவற்றில் இடையூறுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதனையடுத்து இலங்கை எரிபொருள் பங்கீட்டு முறைமையை (கோட்டா முறைமை) நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானித்தது. இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உரம் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களில் இலங்கை பெருமளவுக்குத் தங்கியிருப்பதனால், அது தற்போதைய வெளியக அதிர்ச்சிகளால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.

2022 ஆம் ஆண்டு இலங்கை முகங்கொடுத்த தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வரிசை யுகம் என்பவற்றின் பின்னர், வெளியக அதிர்ச்சிகளைக் கையாள்வதற்கான நாட்டின் இயலுமை பலவீனமான நிலையிலேயே உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் ஹோர்முஸ் நீரிணை பதற்றங்களுக்கு மத்தியில் உணவுப்பொருட்களில் விலையேற்றத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைவரம் நாட்டின் பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைக்கும் அபாயத்தைக் கொண்டிருப்பதுடன், நாட்டை உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச்செலவு நெருக்கடிக்குள் தள்ளக்கூடும்.

அதேவேளை இந்நெருக்கடியைக் கையாள்வதற்கு மின்சார நுகர்வை சுமார் 25 சதவீதத்தினால் குறைத்தல், கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் பங்கீட்டு முறைமை, புதன்கிழமையை அரச நிறுவனங்களுக்கான சிறப்பு விடுமுறை தினமாக அறிவித்தமை, விளம்பர மற்றும் வீதி விளக்குகளைக் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அணைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதனிடையே எரிபொருள் விலையேற்றம், சுற்றுலாத்துறை மந்தநிலை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் பணவனுப்பல்களில் ஏற்படக்கூடிய வீழ்ச்சி என்பன நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அரச நிறுவனங்களை மூடுதல் மற்றும் பொதுப்போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்தல் போன்ற உலகளாவிய நெருக்கடியின் பக்கவிளைவுகள், டிஜிட்டல் முறைமைக்கு நிலைமாற்றமடைய முடியாத நிலையில் உள்ள மற்றும் அன்றாட வாடிக்கையாளர்களை நம்பியிருக்கும் சிறு வணிகங்களைப் பெரிதும் பாதிக்கும்.

தற்போது எரிபொருள் மற்றும் மின்கட்டண உயர்வு என்பன ஏற்கனவே உணவு மற்றும் போக்குவரத்து விலைகள், கட்டணங்களில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. ஆகவே போர் தொடரும் பட்சத்தில் வாழ்க்கைச்செலவு மேலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறலாம். ஏற்கனவே இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நலிவுற்ற நிலையில் உள்ள மக்கள் மத்தியில் இந்த அழுத்தங்கள் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

எவ்வாறாயினும் மத்திய கிழக்கு மோதல்கள் விரைவில் முடிவுக்கு வந்து வர்த்தகப் பாதைகள் வழமை நிலைக்குத் திரும்பினாலும், உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் பின்விளைவுகள் நீண்டகாலத்துக்கு நீடிக்கும் என அதில் எச்சரித்துள்ளார்.

basil

பசிலை கைதுசெய்யுங்கள் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுங்கள் -நீதவான் உத்தரவு

October 14, 2026

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைதுசெய்து தன்முன்னாள் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்

srisena

அரசமைப்பினை பின்பற்றியே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கினேன்- மைத்திரி

October 14, 2026

அரசமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

nihal abeyasinga

புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஜனவரியில்

October 14, 2026

அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் 2027 ஜனவரியில் ஆரம்பமாகலாம் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

anojan

அனோஜனின் மரணதண்டனை இரத்து

October 14, 2026

இலங்கையரான அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்

IMG_9425

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

October 14, 2026

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன்

IMG_9424

ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

October 14, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும்

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக

ja

கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

October 14, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.