இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம்

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் 16ஆவது நாட்களை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட சமீபத்திய வீடியோ ஒன்றில் அவருக்கு வலது கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் சமூக வலைத்தளங்களில் கிளம்பியுள்ளது.

கடந்த மார்ச் 13 அன்று நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் குறித்துப் பேசும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை கவனித்த பயனர்கள், அதில் அவர் தன் கையை அசைக்கும்போது ஒரு இடத்தில் ஆறு விரல்கள் தெரிவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, #WhereisBibi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆகத் தொடங்கியது. நெதன்யாகு ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டார் என்றும், தற்போது வெளியாகும் வீடியோக்கள் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த வதந்திகளை எக்ஸ் தளத்தின் க்ரோக் ஏஐ மறுத்துள்ளது. நெதன்யாகு அந்த வீடியோவில் ஐந்து விரல்களைக் கொண்டுள்ளார் என்றும், ஒளிப்பதிவு செய்யப்பட்ட கோணம் மற்றும் கையின் அசைவு காரணமாக ஏற்பட்ட ஒரு மாயத்தோற்றமே அது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

எனினும், இந்த வதந்திகளுக்கு அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

Chami

விமல் வீரவன்ச போன்ற போலித் தலைவர்களை மக்கள் ஒதுக்கி விட்டார்கள்

March 15, 2026

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக ஐக்கிய மக்கள்

arr

சட்டவிரோத பொருட்களுடன் சுன்னாகத்தில் மூவர் கைது

March 15, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து மூவர் சட்டவிரோத பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்

Ele

பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்குக் கடும் அழுத்தம்

March 15, 2026

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாமல், தேவையேற்படின் பழைய தேர்தல் முறையிலாவது உடனடியாக நடத்துவதற்கு அரசு

4

புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம்

March 15, 2026

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை

Harini-amarasooriya

ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைகின்றமை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது – ஹரிணி

March 15, 2026

ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப்

gov

2026 ஆம் ஆண்டுக்காக அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள்!

March 15, 2026

2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல்

ir ban

அமெரிக்க வங்கிகளுக்கு எச்சரிக்கை!

March 15, 2026

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி

an

அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவது குறித்த கலந்துரையாடல்

March 15, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத்

bee

பெருமளவிலான பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல்!

March 15, 2026

துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. துங்கல்பிட்டிய

566

யாத்திரை சென்ற கார் விபத்து: சாரதி போதைப்பொருள் உட்கொண்டமை உறுதி!

March 15, 2026

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் – ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில்

dea

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

March 15, 2026

கம்பஹா – தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பே – பூகொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை

i

தகுதிகாண் போட்டி: மெக்சிகோ பயணத்தைத் தள்ளிப்போடுமாறு ஈராக் கோரிக்கை

March 15, 2026

உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக, ஈராக் தேசிய கால்பந்து அணி தனிப்பட்ட விமானம் மூலம் மெக்சிகோவிற்குப்