இவ்வருடம் 250 நல்வாழ்வு மையங்கள் நிறுவப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டம் வரும் ஜனவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இவ்வருடத்துக்குள் 250 மையங்களையும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் ஆரோக்யா மையங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி ஆகியோர் நேற்று (17) கண்டி அஸ்கிரி மகா விகாரையில் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரையும், மல்வத்து மகா விகாரையில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், மல்வத்து மகாநாயக்க தேரரிடம் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். இதன்போது அமைச்சர் குறிப்பிடுகையில்,

கடந்த ஆண்டு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டம் வரும் ஜனவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வருடத்திற்குள் 250 மையங்களையும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் இம்மையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்தவும், பிரதான வைத்தியசாலைகளுக்கு வருகை

தரும் நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம். கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் இதய நோயாளர்களுக்காகச் சகல வசதிகளுடன் கூடிய நவீன இதய சிகிச்சை பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படும். சுமார் 12 பில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள இக்கட்டிடப் பணிகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவு செய்வதற்கான அனைத்து திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அரச வைத்தியசாலைகளில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த 62 அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை ஆதார வைத்தியசாலையை நவீன வசதிகளுடன் வேறொரு இடத்தில் புதிதாக நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியினால் சேதமடைந்த வத்தேகம வைத்தியசாலையையும் புதிய இடத்தில் நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட சிலாபம், மஹியங்கனை உள்ளிட்ட 6 அரச வைத்தியசாலைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் புனரமைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள புத்தபகவானின்புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசன வழிபாடுகளுக்காக வைக்கப்பட உள்ளன என்றார்.

vi-1

2026 ஜப்பான் ஆசிய விளையாட்டு விழா; கிரிக்கெட்டில் வியாஸ்காந்த்!

September 14, 2026

ஜப்பானில் நடைபெறவுள்ள அய்ச்சி-நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் நடைபெறவுள்ள ஆடவர் மற்றும் மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றவுள்ள

rib

சபலெங்காவை வென்று சம்பியனான றிபெகினா

September 14, 2026

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில்இ உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எலினா றிபெகினா சம்பியனானார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (13)

1200-675-27270261-thumbnail-16x9-ramesh

“பெற்ற மகனையே முறையாக வளர்க்காத மு.க. ஸ்டாலின், கட்சியை ஒழுங்காக நடத்துவார் என எதிர்பார்க்க முடியாது!” – அமைச்சர் ரமேஷ் சாடல்

September 14, 2026

திருச்சி: ஆர்ப்பாட்டங்களில் திமுகவினர் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதே அக்கட்சியின் டி.என்.ஏ (DNA) என்றும், முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ மு.க. ஸ்டாலின்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

“அஜித் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!” – அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி

September 14, 2026

தூத்துக்குடி: லண்டனில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் சந்திப்பு குறித்தும், சில்வர்ஸ்டோன் கார் பந்தயத் தொடக்க விழா

1200-675-25470070-thumbnail-16x9-admk-aspera

“இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்!” – அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

September 14, 2026

வேலூர்: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நேர்மையான முறையில் செயல்பட்டு வருவதாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடன் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அவர்

tvk-bus-2

சேலத்தில் தவெக கொடி நிறத்தில் புதிய அரசுப் பேருந்துகள்: போக்குவரத்துத்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை!

September 14, 2026

சேலம்: சேலம் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசுப் பேருந்துகளுக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி

HSJq4ica8AAcl1E

அஜித் – விஜய் சந்திப்பு: தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் இங்கிலாந்தில் நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார்

27628648_anand

“தவெகவில் இணைய ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை!” – மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளர் மரகதம் குமரவேல் விளக்கம்

September 14, 2026

மதுராந்தகம்: தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலின்

vinayagar (1)

ரூ. 25 லட்ச மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சி ஏலேல சிங்க விநாயகர்!

September 14, 2026

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய

elmore

செம்மணி மனித புதைகுழி அகழ்வை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – நம்பகதன்மை மிக்க விசாரணை அவசியம் -பிரிட்டன்

September 14, 2026

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து சர்வதேசதராதரத்திலான நம்பகதன்மை மிக்க வெளிப்படையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என இலங்கையிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாக பிரிட்டன்

Shiranthi-Rajapaksa 1

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காக பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி துஷ்பிரயோகம்: சிறாந்தி ராஜபக்ஷவிடம் எஃப்பிஐடி விசாரணை நடத்த தீர்மானம்

September 14, 2026

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டீ ஸ்கேனர் (CT scanner) இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய

Namal-750x422

விமானங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி – நாமல் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

September 14, 2026

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் பொதுஜனபெரமுன