இலங்கையை நோக்கி வரும் நிலக்கரி கப்பல்கள்

எதிர்பார்க்கப்படும் வறட்சி அல்லது நிலக்கரி இறக்குமதி தாமதங்கள் காரணமாக, நாட்டின் மின்சார விநியோகத்துக்கு இதுவரை எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தித் திறன் குறையக்கூடும் என நிலவும் அச்சங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

நாடு கடும் வறட்சியை எதிர்கொள்ளவிருப்பதாகவும், இது நீர்மின் உற்பத்தியைப் பெருமளவு பாதிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க விடுத்திருந்த எச்சரிக்கை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், “எரிசக்தி ஆதாரங்களைத் திறமையாக விநியோகிப்பதற்கான அனைத்து உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் தற்போது இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

ஒரு சில கப்பல்கள் தாமதங்களை அறிவித்துள்ள போதிலும், அது மின் விநியோகத்தைப் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தவில்லை.

எதிர்பார்க்கப்படும் மழைப் பற்றாக்குறை அல்லது இறக்குமதித் தாமதங்களால் மின் தட்டுப்பாடு ஏற்படும் என இதுவரை கண்டறியப்படவில்லை.

எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு குறித்த செய்திகள் பரவி வரும் சூழலில், பிரதி அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.

namal

மாறிவரும் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது

March 18, 2026

உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக

kava

மலையக மக்களின் மீள்கட்டமைப்பு: கோரிக்கை ஆவணக் கையொப்பமிடல்!

March 18, 2026

‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட ஒன்றுகூடலும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிடும் நிகழ்வும்

vav

நெல் கொள்வனவு தொடர்பில் வவுனியா விவசாயிகள் முறைப்பாடு

March 18, 2026

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறான இடர்பாடுகளும்

hurm

மாபெரும் குண்டு வீச்சுக்களால் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

March 18, 2026

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுங்கு குழிகளை ஊடுருவும்

har

நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

March 18, 2026

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய

pra

பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

March 18, 2026

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

rav

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

March 18, 2026

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி

chi

இணையத்தள மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

March 18, 2026

தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க

amb

அக்கரைப்பற்று பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு!

March 18, 2026

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால்

toru

சுற்றுலாத் துறை அமைச்சின் விசேட அறிவிப்பு

March 18, 2026

சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளுக்காகப் பதிவு செய்யும் முறைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு

us

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

March 18, 2026

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையமான ‘கிரீன் ஸோன்’ பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகம் மீண்டும்

Sigh

குடிவரவு மோசடி சந்தேக நபர் விடுவிக்கப்பட்டு கனடா மீது வழக்குத் தொடர அனுமதி

March 18, 2026

40 வயதான இந்தியரான குர்பிரீத் சிங், கனடா அரசாங்கம் மற்றும் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் (CBSA) ஊழியர்கள் மீது