இலங்கையில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால் ரூ. 4 இலட்சம் வரை அபராதம்

வருமானம் எதுவும் ஈட்டப்படாத நிலையிலும், வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் ரூ. 50,000 தொடக்கம் ரூ. 400,000 வரையிலான அபராதம் விதிக்கப்படக்கூடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நவம்பர் 30ஆம் திகதி எனவும், அந்தத் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படுபவை தாமதமானவையாகக் கருதப்பட்டு அபராதங்களுக்கு உட்படுத்தப்படும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நந்தன குமார தெரிவித்தார்.

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டிய தனிநபர்கள், தாம் எவ்வித வருமானமும் ஈட்டாத போதிலும் அவற்றைச் சமர்ப்பிக்கத் தவறினால், நடைமுறையிலுள்ள வரிச் சட்டங்களின் கீழ் ரூ. 50,000 அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும்; இது ரூ. 400,000 வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியைச் செலுத்தத் தவறிய பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோருக்கும், 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியைச் செலுத்த வேண்டியவர்களுக்கும் திணைக்களத்தினால் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற அறிவித்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அபராதங்களைத் தவிர்ப்பதற்காக, வரி செலுத்துவோர் தமது வரிப் பொறுப்புகளைக் குறித்த காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காசு கொடுக்கல் வாங்கல்கள் மூலம் ஏற்படும் அதிக வருமான வரி தொடர்பாக அண்மையில் எழுந்த கவலைகளுக்கு விளக்கமளித்த குறித்த அதிகாரி, 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் வரும் காசு கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் செலவினங்கள், வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் கணக்கிடும்போது கழிவுகளாக அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் காணி வாங்கிய தனிநபர்களை இந்த விதிமுறை பாதிக்காது எனவும் நந்தன குமார தெளிவுபடுத்தினார்.

எவ்வாறாயினும், குறித்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் காசு கொடுக்கல் வாங்கல்களுக்குப் பொருந்தும் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுபவர்கள், அவ்வாறான செலவினங்கள் அனுமதிக்கப்படாததன் காரணமாக அதிக வருமான வரிப் பொறுப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

Diana

குற்றத்தை ஒப்புக்கொண்டார் முன்னாள் எம்.பி. டயானா கமகே

November 26, 2026

சரியான விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) டயானா கமகே இன்று (26) கொழும்பு

kows

ஊடகத்துறையை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது – ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன கருத்து!

November 26, 2026

ஊடகச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தும்போது, அடிப்படை ஊடக ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பதும் அவசியமாகும்; ஊடகத்துறையை எவ்வாறு

d

இலங்கையின் பாதாள உலகக் குழுவுக்கு வு-56 துப்பாக்கி வழங்கியவர் துபாயில் கைது!

November 26, 2026

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு, பொலிஸ் வீதித்தடையில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது தனது கடமை நேர T-56 ரக துப்பாக்கியைத் திருடி,

easter bla

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளில் திடீர் திருப்பம்?

November 26, 2026

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் விசாரணைகளைத் திசைதிருப்பியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ்,

jud

இலங்கையில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால் ரூ. 4 இலட்சம் வரை அபராதம்

November 26, 2026

வருமானம் எதுவும் ஈட்டப்படாத நிலையிலும், வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் ரூ. 50,000 தொடக்கம் ரூ.

45

Whats App செயலியில் இனி செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பலாம்

November 26, 2026

டெலிகிராம் (Telegram), டிஸ்கோர்ட் (Discord) போன்ற குறுஞ்செய்தி செயலிகளில் நீண்ட காலமாகவே செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பும் வசதி இருந்தபோதிலும்,

acci main

பால் லொறியில் பயணித்த மாணவி தவறி விழுந்து பலி

November 26, 2026

நோர்வூட், வென்ச்சர் ஐம்பது ஏக்கர் பகுதியில் பால் ஏற்றிச் செல்லும் லொறியில் பயணித்த 13 வயதுடைய பாடசாலை மாணவி தவறி

photo-collage.png (2)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 72வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

November 26, 2026

வல்வெட்டித்துறையில் இன்று காலை 10 மணிக்கு கேக் வெட்டி எள்ளுப்பாகு வழங்கி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்

Jaishankar

இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்

November 26, 2026

இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும் எனத் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார

WhatsApp Image 2026-11-26 at 09.25.11

வீரத்தின் அடையாளமாய், தியாகத்தின் வரலாறாய் வாழும் மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள்…

November 26, 2026

மாவீரர் நாள் நினைவேந்தல் 2026 நிகழ்வு நாளை நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி முதல் Mississaugaவில்

ESWATINI-768x432

இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை

November 26, 2026

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது உள்ளூர் சமூகத்திற்கோ அறிவிக்கப்படாத இரகசிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம், இலங்கை அகதியும் பாலியல் குற்றவாளியுமான நபரொருவரை

WhatsApp Image 2026-11-25 at 09.49.26

பிரித்தானியா Knighthood கௌரவத்தை பெற்ற பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா இலங்கை விஜயம்!

November 26, 2026

வின்ட்சர் கோட்டையில் பிரித்தானியாவின் நைட்ஹூட் (Knighthood) கௌரவத்தை பெற்ற இலங்கையில் பிறந்த கல்வியாளர் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, அவர்