பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன் செயற்படுமாறு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், சவூதி அரேபியாவிற்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உம்ரா யாத்திரைக்குத் திட்டமிட்டுள்ளவர்கள் தமது யாத்திரைக் குழுக்களின் பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருக்குமாறும் துணைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அவசர நிலைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான மாற்று ஏற்பாடுகள் தமது பயணத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#Sooriyannews #srilanka #TruthAtAllCosts #umrah #jittah #saudiarabia