இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் குழு பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche உள்ளிட்ட தூதுக்குழுவினர் நவம்பர் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து, 2028–2032 காலப்பகுதிக்காக இலங்கைக்கு முன்மொழியப்பட்டுள்ள ‘ஐக்கிய நாடுகள் நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம்’ தொடர்பாகக் கலந்துரையாடினர்.

இதன்போது, முன்மொழியப்பட்ட ஒத்துழைப்புச் சட்டகத்தைத் தயாரிப்பதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கூட்டு வேலைத்திட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார்.

அமைச்சுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள், புத்திஜீவிகள் சமூகம் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களுடனும் கலந்துரையாடி, ஒத்துழைப்புச் சட்டகத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய பிரதான துறைகளையும் இலக்குகளையும் அடையாளம் காணும் செயன்முறையின்போது பிரதமருடன் கலந்துரையாடக் கிடைத்தமை ஒரு விசேட சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தற்போது முகங்கொடுத்துவரும் பிரதான அபிவிருத்திச் சவால்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்துப் பிரதமருக்கும் தூதுக்குழுவினருக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அபிவிருத்தி ஒத்துழைப்புக்காகப் பரந்த, இலக்கு வைக்கப்பட்ட அணுகுமுறையொன்றைப் பின்பற்ற வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், முன்மொழியப்பட்ட வேலைத்திட்டங்கள் இலங்கையின் தேசிய அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைவாக இருக்க வேண்டும் என்பதையும், அவ்வேலைத்திட்டங்கள் ஊடாக நாட்டின் அபிவிருத்தித் தேவைகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலக்கு வைக்கப்பட்ட, பயனுள்ள ஒத்துழைப்பு வேலைத்திட்டங்கள் ஊடாக இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையைத் துரிதப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புத் துறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அபிவிருத்தித் திட்டங்களை அடிமட்டத்திலிருந்து பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும்போது தாக்கம் செலுத்தும் பிரதான சவால்களாக, நீண்ட காலம் எடுக்கும் கொள்முதல் நடைமுறைகளையும், தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளப் பற்றாக்குறையையும் அடையாளம் காண முடியும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களைப் பயனுள்ள வகையில் திட்டமிடுதல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக உரிய அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். நிறுவனக் கொள்ளளவை வலுப்படுத்துவதற்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உரிய பதவிகளுக்குத் தகுந்த திறன்களும் நிபுணத்துவமும் கொண்டவர்களை நியமிப்பதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அபிவிருத்தித் திட்டமிடல் மற்றும் தீர்மானம் எடுக்கும் செயன்முறைகளில் சிவில் சமூக அமைப்புகளையும் ஏனைய உரிய பங்குதாரர்களையும் இணைத்துக்கொள்வதன் அவசியம் கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது. அதன் மூலம் அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்பை உள்ளடக்கிய, சகலரையும் உள்வாங்கும், தேவைகளுக்குப் பதிலளிக்கும் அபிவிருத்திப் பெறுபேறுகளை அடைய முடியும் எனவும் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஐக்கிய நாடுகள் தூதுக்குழுவில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் Joni Simpson, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி கலாநிதி ராஜேஷ் பாண்டவ, சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் இலங்கைக்கான பிரதானி கிறிஸ்டின் பார்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோட்டா ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

cour

யாழ் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை

November 21, 2026

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக,

satti

சாட்டி மாவீரர் துயிலுமில்ல வழக்கில் தீர்வு

November 21, 2026

டை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டியுள்ள ஊர்காவற்றுறை

jos sta

வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வில்லை; 30 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு

November 21, 2026

2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30

nin

நிந்தவூர் கடற்கரையில் நீராடச் சென்ற மாணவரும் காப்பாற்றச் சென்ற நபரும் மாயம்

November 21, 2026

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் நேற்று(20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்,

pillai

பிள்ளையானுக்குப் பிணை கோரி மனு

November 21, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

ha

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் குழு பிரதமர் சந்திப்பு

November 21, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche உள்ளிட்ட தூதுக்குழுவினர் நவம்பர் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி

bu

Builders Gateway நிர்மாணத்துறை வசதியளித்தல் பிரிவு திறந்து வைப்பு

November 21, 2026

அரச நிர்மாணத்துறை பணிகளின் போது தனியார் நிறுவனங்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, தடைகளை நீக்கி

WhatsApp Image 2026-11-21 at 06.49.57

தமிழீழத் தேசியக்கொடி நாள்; மாவீரர் வார ஆரம்ப நிகழ்வு 2026

November 21, 2026

மிசிசாகா நகர மேயர் Alvin Tedjo மற்றும் முக்கிய அரச பிரமுகர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்வு! இன்று நவம்பர் 21ஆம்

Parl

இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

November 20, 2026

​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்

images

வடக்கின் சிறந்த பிரதிநிதியாக சிவாஜிலிங்கம் திகழ்ந்தார் – NSSP மற்றும் USP இரங்கல்

November 20, 2026

தமிழ் மக்களின் விடுதலை அபிலாசைகளை நனவாக்கும் முயற்சிகளில், தெற்கின் ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் வர்க்க இயக்கங்களுடன் இணைந்து தொடர்ந்து

keth

கீதாஞ்சலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

November 20, 2026

கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கக் காணியை கிரிஷ் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு வழங்கும் கொடுக்கல் வாங்கலில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு

thada

274 மீன்பிடி வலைகளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

November 20, 2026

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வியாழக்கிழமை (19.11.2026) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்