அம்பலந்தொட்ட – கதிர்காம பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவன பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதில் 40 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – கதிர்காம பேருந்து ஒன்றும், திஸ்ஸவிலிருந்து கரப்பிட்டிய நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.