இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தருமாறு வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனாவின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தியும் மாவட்ட அரசாங்கதிபரிடம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

குறித்த மனுவில் தெரிவிக்கப்படுவதாவது,

கடந்த 25. 2. 2026 நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா எமது சம்மேளனத்தின் மீது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அன்றைய கூட்டத்திற்கு எம்மை அழைக்காமையால் நாம் அங்கு சமூகமாகவில்லை. அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு விடயத்தை அதிகாரிகள் கையில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், மிக மோசமான வார்த்தைகளால் எமது சம்மேளனம் விமர்சிக்கப்பட்டுள்ளது.

என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு எமது பக்க நியாயங்களையும், உண்மைகளையும் தங்களின் மேலான கவனத்திற்கு தருகிறோம். ஆராய்ந்து ஏற்ற ஆவண செய்வீர்கள் என நம்புகிறோம். இதன்போது, “இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம்”பதிவு அற்றதாக தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு எமது சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு உபசட்டவிதிகள் அங்கிகரிக்கப்பட்டு, வங்கி நடைமுறைகள், ஒப்பந்த வேலைகள் செய்யப்பட்டு முழுமையான செயற்பாட்டு அமைப்பாக இன்றுவரை இயங்கி வருகின்றது.

கடந்த 2022ஆம் ஆண்டு தற்போதைய பிரதி கமநல அபிவிருத்தி ஆணையாளர் “சமமேளனம்” என பெயரிட்டு இருப்பது சட்ட ஏற்பாட்டுக்கு ஏற்புடையதாக இல்லாது இருப்பதால் பொதுக்கூட்டம் கூடி பெயர்மாற்றம் செய்து தருமாறு கோரி இருந்தார். இதன் பிரகாரம் பெயர் மாற்றம் மேற்கொண்டுள்ளோம்.

அதே சமயம், எமது கணக்குகள் அரசால் அங்கிகரிக்கப்பட்ட கணக்காய்வு நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு பிரதிகள், மாவட்ட பிரதி ஆணையாளர் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களுக்கும் வழங்கி பொதுமக்கள் பார்வைக்கும் எமது காரியாலயத்தில் ஒட்டி பொதுச்சபை கூட்டத்தில் சமர்ப்பித்து அங்கிகரிக்கப்பட்ட அறிக்கை.

அதில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் சபையில் கூறிய 2019ஆம் ஆண்டில் இரணைமடு சம்மேளனத்தால் சேகரிக்கப்பட்ட 25, 451,949 ரூபா நிதி விபரம் கோப்பாய் குழுவில் இருந்து பெற்றதாக தெரிவித்திருந்தார். இது எமது கணக்கறிக்கையில் 01.01.2019 ஆம் திகதியில் மொத்தப் பொறுப்பு ஆகும்.

இதில் நடைமுறை அல்லாத சொத்துக்களின் பெறுமதி (கட்டடங்கள்) 25, 300,002ரூபாய் என்பதை அர்ச்சுனாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே ஒவ்வொரு ஆண்டின் மொத்த பொறுப்பிலும் இந்த நடைமுறை அல்லாத அசையாத சொத்துக்களின் பெறுமதி வரும்.

இந்நிலையில், இராணுவ கட்டுப்பாட்டு பிரதேச வயல் நிலங்களிற்கு உரமானியம் வழங்கியது என தெரிவித்துள்ளார்.

இதற்கும் எமது சம்மேளனத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. ஆயினும் 2021.3.25 இரணைமடு பயிர்செய்கை குழு கூட்ட தீர்மானப்படி இராணுவத்தினர் வைத்துள்ள அரச பண்ணை காணி 65 ஏக்கருக்கு நீர் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி உரம் வழங்கப்பட்டிருக்கலாம். எனவே மேற்படி அவரின் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரிப்பதுடன் அனைத்திற்கும் ஆவணரீதியான சான்றுகளை சமர்ப்பித்து எமது தரப்பு உண்மையை உறுதிப்படுத்த தயாராக உள்ளோம். இதனால் எமக்கான வாய்ப்பை விரைந்து ஏற்படுத்தி தர வேண்டுகிறோம்.

தலைவர் தங்களின் மேலான கவனத்திற்கு. கோப்பா குழு இலங்கை நாடாளுமன்றம், சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யெ.றஜீவன், இ.அர்ச்சுனா, அரசாங்க அதிபர் அவர்கள் மாவட்ட செயலகம் கிளிநொச்சி, பிரதி ஆணையாளர், கமநல அபிவிருத்தி திணைக்களம், கிளிநொச்சி, பிரதிப்பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்களம் கிளிநொச்சி, பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர், விரிவாக்கம் கிளிநொச்சி, பணிப்பாளர், தேசிய கணக்காய்வு திணைக்களம், மாவட்ட செயலகம் உள்ளிட்டவர்களுக்கு இந்த மனுவின் பிரதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை