இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது உள்ளூர் சமூகத்திற்கோ அறிவிக்கப்படாத இரகசிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம், இலங்கை அகதியும் பாலியல் குற்றவாளியுமான நபரொருவரை எவ்விதத் தொடர்புமில்லாத ஆபிரிக்க நாடான எஸ்வாட்டினிக்கு (Eswatini) பிரித்தானியா கட்டாயமாக இடமாற்றம் செய்துள்ளது. கடுமையான மனநலப் பாதிப்பு மற்றும் தற்கொலை முயற்சிப் பின்னணியைக் கொண்ட குறித்த நபர், எஸ்வாட்டினிக்குச் சென்ற சில மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பிபிசி (BBC) செய்திச் சேவை அம்பலப்படுத்தியுள்ளது.

35 வயதான கிஷாந்த் பெரமல்யா (Kishanth Peramalya) என்ற இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரை எஸ்வாட்டினியில் நிரந்தரமாகத் தங்கவைப்பதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளைப் பிரித்தானிய அரசாங்கம் முன்னெடுத்து வந்த நிலையிலேயே அவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இரு அரசாங்கங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவிருந்த வரைவு ஒப்பந்தத்தின் நகலொன்றை பிபிசி பெற்றுள்ளது. அதன்படி, பெரமல்யாவின் தங்குமிடம், மருத்துவச் செலவு மற்றும் ஏனைய பராமரிப்புச் செலவுகளை மூன்று ஆண்டுகளுக்குப் பிரித்தானியா ஏற்கும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. அகதியொருவரை நிரந்தரமாக வெளிநாடொன்றுக்குக் கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்த முதலாவது அறியப்பட்ட சம்பவம் இதுவெனப் புலம்பெயர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டியோகோ கார்சியா தடுப்பு முகாமும் மனநலப் பாதிப்பும் 2021 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடா நோக்கிப் படகு மூலம் செல்ல முயன்ற பல இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பெரமல்யாவும் இந்து சமுத்திரத்தில் வைத்து பிரித்தானிய கடற்படையினரால் மீட்கப்பட்டார். பின்னர் அவர்கள் பிரித்தானிய இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளமான டியோகோ கார்சியா (Diego Garcia) தீவில் தடுத்து வைக்கப்பட்டனர்.

பெரமல்யா இலங்கைக்குத் திரும்புவது பாதுகாப்பற்றது என்பதை ஏற்றுக்கொண்ட தீவின் அதிகாரிகள் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கிய போதிலும், மூன்று ஆண்டுகளாக அவரை முகாமிலேயே தடுத்து வைத்திருந்தனர். (பின்னர் இத்தடுப்புக்காவல் சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது).

இலங்கையில் பதின்ம வயதில் இராணுவத்தினரால் சித்திரவதைக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளானதால் பெரமல்யா கடும் மன அழுத்த நோயால் (PTSD) பாதிக்கப்பட்டிருந்தார். டியோகோ கார்சியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது மனநிலை மேலும் மோசமடைந்து பலமுறை தற்கொலைக்கு முயன்றார். அக்காலப்பகுதியில் தாக்குதல், தீவைப்பு மற்றும் நான்கு பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனையும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் பெற்றார்.

இரகசிய இடமாற்றமும் மரணமும் 2024 டிசம்பரில் டியோகோ கார்சியாவிலிருந்த ஏனைய இலங்கை அகதிகள் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட போதிலும், குற்றப் பின்னணி காரணமாக பெரமல்யாவை அனுமதிக்க அமைச்சர்கள் மறுத்துவிட்டனர். அவரை வேறொரு பாதுகாப்பான நாட்டிற்கு அனுப்பப் பிரித்தானியா 20-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், 2026 பெப்ரவரியில் ஈரானுடனான போருக்காக அமெரிக்கா டியோகோ கார்சியா தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதையடுத்து, அங்கிருந்து அத்தியாவசியமற்ற நபர்கள் வெளியேற்றப்பட்டனர். மார்ச் மாத இறுதியில் மாலைதீவிற்கு 30 நாட்கள் அனுப்பப்பட்ட பெரமல்யா, அங்கிருந்து ஆபிரிக்காவின் எஸ்வாட்டினி நாட்டிற்கு அனுப்பப்பட்டார்.

எஸ்வாட்டினியில் தனிமையான விருந்தினர் விடுதியொன்றில் அவர் தங்கவைக்கப்பட்டிருந்ததாக இந்தியாவிலுள்ள அவரது சகோதரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார். “அவருக்கு அங்கு செல்லத் துளியும் விருப்பமில்லை. தனிமையால் மிகவும் பாதிக்கப்பட்டு தினமும் நான்கு முறை என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்” என அவர் கவலை வெளியிட்டுள்ளார். மனநலம் மிகவும் மோசமடைந்த நிலையில், கடந்த செப்டெம்பர் 13 ஆம் திகதி அவர் தற்கொலை செய்துகொண்டார்.

சர்வதேச மற்றும் உள்ளூர் எதிர்ப்புகள்

  • குடும்பத்தினரின் கோரிக்கை: பெரமல்யாவை நிரந்தரமாக அங்கு தங்கவைக்கும் திட்டம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ள அவரது குடும்பத்தினர், அவர் நடத்தப்பட்ட விதம் குறித்துப் பதிலளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

  • எஸ்வாட்டினி சமூகத்தின் கண்டனம்: தமது நாட்டின் சுகாதாரத் துறையே சீர்குலைந்துள்ள நிலையில், வெளிநாட்டுக் குற்றவாளிகளையும் மனநலப் பாதிப்புள்ளவர்களையும் அனுப்பி ஆபிரிக்காவை உலகின் பிரச்சினைகளுக்கான “குப்பைக் கிடங்காக” (Dumping ground) மாற்றுவதாக தென்னாபிரிக்க சட்ட மையத்தின் மெலுசி சிமெலேன் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் குற்றவாளியொருவரைத் தமது நாட்டிற்கு அனுப்பியதன் மூலம், ஏழை நாடுகளின் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் இழைக்கப்பட்டால் பரவாயில்லை எனப் பிரித்தானியா கருதுகிறதா என எஸ்வாட்டினி கிராமியப் பெண்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

  • ஐ.நா. கவலை: பெரமல்யாவின் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் (UNHCR), அகதிகளை மூன்றாம் நாடுகளுக்கு மாற்றும்போது அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது

BBC

WhatsApp Image 2026-11-26 at 09.25.11

வீரத்தின் அடையாளமாய், தியாகத்தின் வரலாறாய் வாழும் மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள்…

November 26, 2026

மாவீரர் நாள் நினைவேந்தல் 2026 நிகழ்வு நாளை நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி முதல் Mississaugaவில்

ESWATINI-768x432

இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை

November 26, 2026

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது உள்ளூர் சமூகத்திற்கோ அறிவிக்கப்படாத இரகசிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம், இலங்கை அகதியும் பாலியல் குற்றவாளியுமான நபரொருவரை

WhatsApp Image 2026-11-25 at 09.49.26

பிரித்தானியா Knighthood கௌரவத்தை பெற்ற பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா இலங்கை விஜயம்!

November 26, 2026

வின்ட்சர் கோட்டையில் பிரித்தானியாவின் நைட்ஹூட் (Knighthood) கௌரவத்தை பெற்ற இலங்கையில் பிறந்த கல்வியாளர் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, அவர்

WhatsApp Image 2026-11-26 at 08.26.10

வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு!

November 26, 2026

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வுக்காக வல்வெட்டித்துறையில் அவரின் இல்லம் தயாராக உள்ளதாக ‘உடுப்பிட்டி செய்திகள்’

photo-collage.png (1)

சுவிசில் மாவீரர் பெற்றோர்,உரித்துடையோர் மதிப்பளிப்பு  

November 26, 2026

சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரின் ஹொக்பெல்டன் (Hochfelden) பகுதியில் ‘மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026’ நிகழ்வானது மணிக்கு நடைபெற்றது.

uk

பிரித்தானியாவிலிருந்து இரகசிய ஒப்பந்தத்தின் கீழ் ஆபிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதி தற்கொலை?

November 26, 2026

பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடொன்றிற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட இலங்கைப் பிரஜை, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளிப்படுத்தப்படாத

fsfsfds

கானி (Kaani) புயலின் முழுப் பாதிப்பு வலயத்திற்குள் இலங்கை?

November 26, 2026

மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட

tha

இனப்படுகொலை நடைபெற்றதை ஐ. நா. சபை அங்கீகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை பூகோள அரசியல் நிலைப்பாடு தடுத்து நிறுத்தியுள்ளது

November 26, 2026

தமிழர்களுக்கு இனப்படுகொலை நடைபெற்றது என்பதை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை பூகோள அரசியல் நிலைப்பாடு தடுத்து நிறுத்தியுள்ளது என

Minnal

23 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

November 26, 2026

23 மாவட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய அநுராதபுரம், அம்பாறை,

mata

விமான நிலையத்தில் வெடி குண்டுப் பீதி

November 26, 2026

ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ‘அசூர் எயார்’ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம்

8

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உதயநிதி உண்மைக்குப் புறம்பான தகவல் – தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு”

November 25, 2026

சென்னை: மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து

the

மாவீரர் துயிலும் இல்ல பசுமைத் திட்டத்திற்கு லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் உதவி

November 25, 2026

மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் என்றும் நினைவில் நிறுத்தி, அவர்களின் நினைவிடங்களைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர்