இந்தியாவுக்கு உதவி பொருட்கள் பெற வர இருந்த ஈரான் விமானம் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் சேதமடைந்ததாக ஈரான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உதவி பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த விமானம் சேதம் அடைந்து இருப்பது உதவி பெறுவதை பாதிப்பதாக அந்த நாடு குற்றம்சாட்டியுள்ளது.
ஈரானின் மஷ்ஹத் (Mashhad) விமான நிலையத்தில் நேற்று அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் வான்தாக்குதலில், Mahan Air நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமானம் நாளை ஏப்ரல் 1ஆம் திகதி இந்தியா வர இருந்ததாகவும் ஈரான் மக்களுக்கான அவசர மருத்துவ பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா உறுதிப்படுத்தாத நிலையில், எந்த தகவலும் கூறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.