இது விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் தேர்தல்!

“இந்த தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. இது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் தேர்தல்” என தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விஜய் பேசினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நடந்த நிகழ்ச்சியில், தவெகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அக்கட்சியின் வேட்பாளர்களையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், மயிலாப்பூரில் வெங்கட்ரமணன், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன், திருச்செங்கோட்டில் அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன், ஆர்.கே.நகரில் மரிய வில்சன், குமாரபாளையத்தில் விஜயலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், “இது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் அல்ல, மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது வேட்பாளர்கள் சாதாரண பின்புலத்தில் இருந்த வந்தவர்கள் என சொல்லுவார்கள். ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்றால், அனுபவத்தை வைத்து கொள்ளையடிக்காதவராக, சட்டவிரோத மணல் குவாரி வைத்திருக்காதவராக, கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் தாக்காதவராக இருக்க வேண்டும்.

எனவே, மக்களுடன் நிற்கும் வேட்பாளர்களை நான் தேர்ந்தெடுத்து உங்கள் முன் அறிமுகப்படுத்துகிறேன். அவர்களை எம்எல்ஏ ஆக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. அது ஒரு ஒட்டுப்போட்ட கூட்டணி. எனவே உங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் விசில் சின்னத்தில் வாக்களிப்பீர்.

இது பாமரர்களுக்கும், ஒரு அதிகார வர்க்கத்துக்கு சேவகம் அடிமைகளுக்கும் நடக்கும் தேர்தல். இது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் தேர்தல். இந்த தேர்தல் மன்னராட்சியில் இருந்து மக்களாட்சியை மீட்பதற்கான தேர்தல். தமிழகத்தின் எதிர்காலத்துக்காக எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

இளைஞர்களுக்காக தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறேன். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற சமூக காவல் உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரிகளில் மன்றம் உருவாக்கப்படும். கல்லூரி படிப்புக்கு ரூ.20 இலட்சம் பிணையில்லா கடன் வழங்கப்படும்.

அரசு வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்த நிலையான ஆள்சேர்ப்பு அட்டவணை உருவாக்கப்படும். 25 வயதுக்கு மேலும் வேலைவாய்ப்பு கிடைப்பது தாமதமானால் பட்டபடிப்பு படித்தோருக்கு மாதந்தோறும் ரூ.4000 மற்றும் டிப்ளமோ படித்தோருக்கு ரூ.2500 வழங்கப்படும். இளைஞரை தொழில்முனைவோர்களாக உருவாக்க ரூ.25 ,லட்சம் பிணையில்லா கடன் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் தமிழகத்தை சேர்ந்தவருக்கே பணி வழங்க, தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். இளைஞர்களின் பிரச்சினை குறித்து அரசுக்கு தெரிவிக்க இளைஞர் ஆலோசனைக்குழு அமைக்கப்படும். இந்த தேர்தல் நான்கு முனைப் போட்டி இல்லை. இத்தேர்தல் இரு முனைப் போட்டிதான். இது மக்கள் விரோத திமுகவுக்கும், மக்கள் ஆதரவு பெற்ற தவெகவுக்கும் இடையே நடக்கும் தேர்தல்” என்றார்.

726405909_1750482232973646_2220582764764604601_n

நீதி அமைச்சர் வருகை: செம்மணி புதைகுழி முன் “OMP அலுவலகம் வேண்டாம்” என உறவுகள் அதிரடிப் போராட்டம்!

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தந்த நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து

us

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

June 19, 2026

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின்

Cont

புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

June 19, 2026

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி

ca

உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

June 19, 2026

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா

727322968_2861356607530672_2715840258650210241_n

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

June 19, 2026

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land