இணையத்தள மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சட்ட அமுலாக்க அமைப்புகள் அண்மையில் இணையவழி மோசடிகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு சந்தேக நபர்களை கைதுசெய்திருந்த அதேவேளை, குறித்த நபர்களில் சீனப் பிரஜைகளும் அடங்குவது குறித்து சீனா கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றச்செயல்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுடன், சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை கடுமையாக எதிர்கொள்வதற்கான இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய உலகில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய வழி மோசடிகள் வேகமாக வளர்ந்து பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், அது ஒரு உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், சீனா, மியான்மர், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து மோசடிகளை எதிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பல குற்றக் குழுக்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நடவடிக்கைகளின் பின்னர் சில குற்றவாளி குழுக்கள் தென்கிழக்காசியாவின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மேம்பட்ட தொலைத்தொடர்பு அமைப்பு, சாதகமான புவியியல் அமைவு, மற்றும் விசா விதிமுறைகளின் தளர்வு போன்ற காரணங்களால் சில மோசடி கும்பல்கள் இலங்கையை தங்களின் செயல்பாட்டு மையமாக பயன்படுத்தி வருவதாக சீனத் தரப்பு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக சீனப் பிரஜைகளை குறிவைத்து நடத்தப்படும் மோசடிகள் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு, சீன அரசு இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, இணைந்த விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

2024 ஆம் ஆண்டில் மோசடிகளில் ஈடுபட்டிருந்த பல சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் அவர்களை கட்டம் கட்டமாக சீனா நோக்கி நாடுகடத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சீனா மற்றும் இலங்கை நீண்டகால நட்பு உறவை கொண்ட நாடுகளாக இருப்பதுடன், இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவு வழங்கி வருகின்றன.

எதிர்காலத்திலும் எல்லைத் தாண்டிய குற்றச்செயல்களை, குறிப்பாக தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை எதிர்க்க இணைந்த நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த ஒத்துழைப்பு முயற்சிகள், இரு நாடுகளின் மக்களின் பாதுகாப்பையும் சொத்துக்களையும் காக்கும் விதமாகவும், இருநாட்டு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் சூழலை உருவாக்கும் வகையிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என சீனத்தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

chem_1

செம்மணி பற்றி வினோத உடைப் போட்டி; சிறுவனின் பெற்றோருக்கு விசாரணை!

October 13, 2026

ம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு

toronto mayor election

நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாக மலிவு விலை வாழ்க்கை மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகளை டொரண்டோ வாக்காளர்கள் விரும்புகின்றனர்

October 13, 2026

டொரண்டோவின் முன்னணி மேயர் வேட்பாளர்கள் இந்த மாத நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாகத் தங்களது பார்வையையும் திட்டங்களையும் முன்வைத்து நகரம் முழுவதும்

Gnanasara-Thera

ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

October 13, 2026

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார்

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு