ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்து 43 ஆண்டுகள் இன்று (2026 ஜூலை 23), கடந்துவிட்டன. இந்நாளினை, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மிகுந்த மனவேதனையுடன் நினைவுகூர்ந்தனர்.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும் எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன.