இரத்தினபுரி, வேவல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் “அமரர் ரமணி பாலேந்திரா நினைவு நூலகம்” சனிக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது.
அமரர் ரமணி பாலேந்திராவின் பத்தாவது ஆண்டு நினைவாக, அவரது துணைவர் பெரியசாமி பாலேந்திரனின் நிதியுதவியுடன் இந்நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், நூல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வேவல்வத்தை தமிழ் வித்தியாலய ஆசிரியை ஜெ. சசிகலாவின் முயற்சி மற்றும் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு ‘உயிரவன்’ வழிகாட்டியாகவும், மாட்டுவாகல ஆசிரியை ஜெ. ஜெயதர்ஷனி துணையாகவும் செயற்பட்டுள்ளனர்.
இதன்போது “அரும்புகள் வாசிப்புக் கழகமும்” அங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது; இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், சர்வோதய பிரதிநிதிகள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.