அரச நிதி பற்றிய குழுவில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலத்திற்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச நிதி பற்றிய குழுவில், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தச்) சட்டமூலம் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் இந்தத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 2026 ஜூலை 01 முதல் வரியில் பதிவு செய்வதற்கான வருடாந்த வருவாய் வரம்பு 60 மில்லியன் ரூபாவிலிருந்து 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

2026 மே 01 முதல் வாகன இறக்குமதி அல்லது உற்பத்தியின் பின்னரான விற்பனையின் போது சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி வசூலிக்கப்படவுள்ளது. எனினும், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் இந்த வரியிலிருந்து விடுவிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி ஆகியவற்றைத் திருத்தி, ஒரு ஒற்றை வரி முறையாகப் பேண வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போதுள்ள வரி வருவாயைத் தக்கவைத்துக்கொண்டு எதிர்காலத்தில் வரி கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலதிகமாக, 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர்கள் உள்நாட்டு டொலர் பிணைமுடிகளில் முதலீடு செய்வதற்கான புதிய விதிகளுக்கும் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, முன்னைய விதிகளின் கீழ் இலங்கை அபிவிருத்தி பிணைமுடிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த முதலீட்டு வாய்ப்பு நீக்கப்பட்டு, புதிய திருத்தங்கள் மூலம் ஏற்றுமதியாளர்கள் தமது வருமானத்தில் 10% வரை அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வெளிநாட்டு செலாவணி ரீதியான கடன் பிணைமுடிகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

che

நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன் – சேகுவேரா; இன்று பிறந்தநாள்!

June 14, 2026

சேகுவேரா அல்லது சே என்று அழைக்கப்படும் இவர் ஜூன் 14 1928 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவிலுள்ள ரொசாரியோ என்னும் இடத்தில்

photo-collage.png (2)

காலி முகத்திடலில் பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலக சாதனை முயற்சி

June 14, 2026

கொழும்பில் இன்று(14) வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வொன்று இடம்பெற்றள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி,

anura may 26

சுரேஷ் சலேயின் உடல்நிலை: ஜனாதிபதியின் தலையீட்டைக் கோருகிறது ‘சர்வஜன பலய

June 14, 2026

கொழும்பு: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற

Rain

எல் நினோ (El Niño) தாக்கம்: இலங்கையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனமழை மற்றும் வெள்ள அபாயம்

June 14, 2026

கொழும்பு: பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, இந்த ஆண்டு ஒக்டோபர்

Devanesan

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் மிகமுக்கிய ஆவணத்தைத் தயாரித்த தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன் நேசையா காலமானார்!

June 14, 2026

இலங்கையின் அரச நிர்வாகத்துறையிலும், சிவில் சமூகப்பரப்பிலும் கொள்கை உறுதிப்பாட்டுடன் நீண்டகாலம் பணியாற்றியவரும், தமிழ்ச்சமூகத்தை சர்வதேச தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்திய ஆளுமையாகவும் திகழ்ந்த

nay

நாளை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம்

June 14, 2026

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை (15) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து

tu

துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!

June 14, 2026

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் ‘D’ குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல்

dd

இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடுகடத்தல்

June 14, 2026

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர்

3

“ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது!” – அண்ணாமலை, லாரன்ஸ் விவகாரத்தில் ரஜினி நற்பணி மன்றம் அசுர வேக அறிக்கை!

June 14, 2026

சென்னை: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களது சுயலாபத்திற்காகப்

2

“திமுக-வை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை; டாஸ்மாக் ரெய்டுக்காக டெல்லி சென்றவர் ஸ்டாலின்!” – திமுக தலைவருக்குத் தவெக ஐடி விங் அசுர வேக மாஸ் பதிலடி!

June 14, 2026

சென்னை: “வாய்ப்பு கிடைக்கும் துறைகளில் எல்லாம் மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக

1

“சாதி, மத, பணபல அரசியலைக் கடந்து மக்கள் மௌனப் புரட்சி செய்துள்ளனர்!” – திமுக கூட்டணி குறித்து துரை வைகோ அசுர வேக அதிரடிப் பேட்டி!

June 14, 2026

மதுரை: “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, மத, பணபல அரசியலை அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மாபெரும் மௌனப்

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்